Watch Video: பயிற்சி ஆட்டத்திலே பயங்கரம்; ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க் - நீங்களே பாருங்க
உலகக்கோப்பையில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
![Watch Video: பயிற்சி ஆட்டத்திலே பயங்கரம்; ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க் - நீங்களே பாருங்க Starc decimates Netherlands with stunning hat-trick, rings alarm bells for India ahead of side's World Cup opener Watch Video: பயிற்சி ஆட்டத்திலே பயங்கரம்; ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க் - நீங்களே பாருங்க](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/01/2b3818ca22e2999668bf78c729b893aa1696152678582102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஸ்டார்க் ஹாட்ரிக்:
திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நெதர்லாந்து அணிகள் மோதின. மழை காரணமாக 23 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக இந்த போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 168 ரன்கள் என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 5 ரன்கள் எடுத்திருந்தபோது அந்த அணியின் தொடக்க வீரர் மேக்ஸ் ஓடவ்ட் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார். அடுத்த பந்திலே வெஸ்லி பாரேசி ஸ்டார்க் பந்தில் ஸ்டாம்பை பறிகொடுத்தார். முதல் ஓவரின் கடைசி 2 பந்துகளும் விக்கெட்டுகள் விழுந்த நிலையில், ஸ்டார்க் மீண்டும் தன்னுடைய அடுத்த ஓவரை 3வது ஓவராக வீசினார்.
View this post on Instagram
மழையால் ரத்து:
அந்த ஓவரின் முதல் பந்திலே நெதர்லாந்து அணியின் பாஸ் டீ லீட் போல்டானார். இதனால், மிட்செல் ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்த 3 விக்கெட்டுகளில் இரண்டு பேரை போல்டாக்கினார். 14.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்து அணி ஆடிக் கொண்டிருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. அதன்பின்பு, தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.
மிட்செல் ஸ்டார்க் 3 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிக முறை உலகக்கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமையை கொண்ட ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக்கோப்பையில் பாட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்க உள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் முக்கிய பந்துவீச்சாளர்களாக மிட்செல் ஸ்டார்க். பாட் கம்மின்ஸ், ஸ்டாய்னிஸ், ஹேசல்வுட், ஆடம் ஜம்பா ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் முக்கிய வீரர்கள் ஆவர். இந்த போட்டி தவிர, நேற்று கவுகாத்தியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய பயிற்சி ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது.
மேலும் படிக்க: ICC World Cup 2023: உலகக்கோப்பையில் மாட்டுக்கறிக்கு அனுமதி இல்லையா? விவரம் உள்ளே
மேலும் படிக்க: World Cup Record: ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக சதம்.. இந்த பட்டியலில் இந்திய வீரரும், இந்தியாவே முதலிடம்..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)