மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு.. வசமாய் சிக்கிய இலங்கை வீரர் குணதிலகா.. கைது செய்த சிட்னி போலீஸ்!
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிட்னியில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிட்னியில் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று காலை அவர் இல்லாமல் இலங்கை அணி ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இலங்கை திரும்பியது.
சில நெருங்கிய வட்டாரங்களின்படி, அவர் மீதான வன்கொடுமை குற்றச்சாட்டில் குணதிலகா சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சிட்னியில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி தனது கடைசி குரூப் ஆட்டத்தில் விளையாடிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வான குணதிலகா, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அஷேன் பண்டார சேர்க்கப்பட்டார். இருப்பினும், அணி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பாமல் அணியுடன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sri Lanka cricketer Danushka Gunathilaka has been arrested in Sydney yesterday for rape. Sri Lanka team left home without him this morning. Gunathilaka was injured three weeks ago and replaced by Ashen Bandara. But team management kept him with the squad without sending him home.
— Rex Clementine (@RexClementine) November 6, 2022
இதேபோல், கடந்த 2018-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்டில் முறைகேடு செய்ததற்காக குணதிலகாவை இடைநீக்கம் செய்தபோது இதேபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குணதிலகா சிக்கிக் கொண்டார். இலங்கையில் நோர்வே பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகா மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இருப்பினும், இந்த வழக்கில் குணதிலகாவின் தலையீடு இல்லை என்று இவரை போலீசார் விடுவித்து, அவரது நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Sri Lanka cricketer Danushka Gunathilaka has reportedly arrested in Sydney yesterday. According to Sri Lanka Cricket sources Danushka Gunatilleke has been arrested over a complaint made by a woman. Sri Lanka team left to Colombo this morning without Danushka Gunatilleke. #lka pic.twitter.com/vaxcdE79EC
— Manjula Basnayake (@BasnayakeM) November 6, 2022
இதேபோல், கடந்த 2021 ம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கை அணி வீரர்களான குசல் மெண்டிஸ், தொடக்க பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா மற்றும் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியபோது ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக எச்சரிக்க பட்டனர். அதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.