IND Vs SA: தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய இந்தியா; டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு
ஏற்கனவே முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளது. இந்த போட்டியினை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும்.
![IND Vs SA: தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய இந்தியா; டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு South Africa vs India 3rd ODI South Africa have won the toss and have opted to field Boland Park, Paarl IND Vs SA: தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய இந்தியா; டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/ee539aaa1f72b562d29ef485f08655bb1699796146228265_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா தென்னாப்பிரிக்கா மத்தியிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போலந்து பார்க் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனால் இந்திய அணி களமிறங்கவுள்ளது. ஏற்கனவே முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளது. இந்த போட்டியினை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும்.
இந்தியா பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன், சாய் சுதர்சன், ரஜத் படிதார், திலக் வர்மா, கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்
தென்னாப்பிரிக்கா ப்ளேயிங் லெவன்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஸோர்ஸி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வியான் முல்டர், கேசவ் மகராஜ், நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ்
இந்த போட்டியில் இந்தியா தரப்பில் ரஜித் படிதார் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறக்கப்பட்டுள்ளார். இதுவரை போலந்து பார்க் மைதானத்தில் நடந்துள்ள போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே 60 சதவிகிதம் வெற்றியை பதிவு செய்துள்ளது. போலந்து பார்க் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்யும் அணி எடுக்கும் சராசரி ஸ்கோர் 254 ஆக உள்ளது.
இப்போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஒடிடியில் ஹாட்ஸ்டாரிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)