மேலும் அறிய

Ganguly on Virat: முரண்பட்ட கருத்துகள்... கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப இருந்த கங்குலி... பூதாகரமாகும் கேப்டன்சி சர்ச்சை

பிசிசிஐ செயலாளர் ஜே ஷா, இந்த விவகாரத்தில் தலையிட்டு, கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என தெரிவித்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியைச் சுற்றி நடந்து வரும் சர்ச்சைகள் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் டி20 கேப்டன்சி பதிவியில் இருந்து விலகிய கோலி, இந்த ஆண்டு, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு டெஸ்ட் கேப்டன்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

இந்த விவகாரத்தில், புதிதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. டி20 கேப்டன்சியில் இருந்து விலகியது தொடர்பாக, கோலி, கங்குலியின் கருத்துகள் வேறுபட்டிருந்தது. இதனால், தான் கூறிய கருத்துகளுக்கு விளக்கம் கேட்டு விராட் கோலிக்கு கங்குலி நோட்டீஸ் அனுப்ப இருந்ததாக் தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்ரிக்காவுக்கு கிளம்பும் முன், விராட் கோலி வீடியோ காட்சி வழியாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் விளையாட நான் தயாராக இருக்கிறேன் எனவும் பிசிசிஐயிடம் தான் ஓய்வு கேட்கவில்லை எனவும் செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி தெரிவித்திருந்தார். ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் தென்னாப்ரிகாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்திருந்த நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலக இருந்ததாக தகவல் வெளியானது. பிசிசிஐ இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி விலகுவதாக தகவல் வெளியாகி சர்ச்சையானது.

அப்போது உண்டான  குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மேலும், டி20 கேப்டன்சியில் இருந்து விலகியது பற்றியும் கருத்து தெரிவித்திருந்தார். அதில் “நான் என்னுடைய முடிவை அறிவித்தபோது பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. என்னுடைய முடிவை மாற்றச்சொல்லி பிசிசிஐ தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இந்த முடிவு சரியானதுதான் என பிசிசிஐ தெரிவித்தது” என போட்டு உடைத்தார்.

ஆனால், கோலி சொல்லியதற்கு முன்னுக்கு பின் முரணாக, பிசிசிஐ தலைவர் கங்குலி பேசி இருந்தார். இது குறித்து கங்குலி பேசும்போது, “டி20 கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம் என நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், அவர் கேப்டன் பதவியில் தொடர விரும்பவில்லை” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டி20 கேப்டன்சி சர்ச்சையில் மற்றொரு பூகம்பம் வெடித்திருக்கிறது. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய கருத்துகளுக்கு விளக்கம் கேட்டு விராட் கோலிக்கு கங்குலி நோட்டீஸ் அனுப்ப இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜே ஷா, இந்த விவகாரத்தில் தலையிட்டு, கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என தெரிவித்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget