Women's T20 World Cup 2023: மகளிர் அணிக்கு பின்னடைவு.. காயத்தில் அவதிப்படும் மந்தனா, கவுர்.. உலகக்கோப்பையில் இருந்து விலகல்?
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா விளையாடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பையின் 8வது சீசன் (பிப்ரவரி 10) நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மகளிர் டி20 உலகக் கோப்பையில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 5 முறையும், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா ஒரு முறையும் பட்டத்தை வென்றுள்ளன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இம்முறையும் பட்டத்தை வெல்ல காத்திருக்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய அணி முதல்முறையாக இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கின்றனர்.
இந்த தொடருக்கு தகுதிபெற்ற 10 அணிகளும் தயாராக உள்ள நிலையில், மொத்தம் 23 போட்டிகள் கொண்ட தொடரானது 27 நாட்கள் நடைபெற இருக்கிறது. தகுதிபெற்ற 10 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மகளிர் T20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறும். அதன் பிறகு நான்கு அணிகள் பிளேஆஃப்களில் மோத இருக்கின்றன.
வருகின்ற 12ம் தேதி இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா விளையாடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது. கடந்த திங்களன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது பீல்டிங் செய்த ஸ்மிருதி மந்தனாவுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த போட்டியில், மந்தனா ஓப்பனிங் செய்வதற்கு பதிலாக மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்தார். அன்றைய இன்னிங்ஸின் மூன்று பந்துகள் மட்டுமே விளையாடி ரன் ஏதுவுமின்றி வெளியேறினார். தொடர்ந்து, கடந்த புதன் கிழமை வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது பயிற்சு ஆட்டத்தில் இருந்து மந்தனா விலகினார்.
இதுகுறித்து ஐசிசி வட்டாரம் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில், ”ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது மந்தனாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. உலகக் கோப்பையில் இருந்து முழுவதுமாக வெளியேறுவாரா என்று கூறமுடியாது. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மந்தனாவால் விளையாட முடியாது” என்று தெரிவித்தது.
இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் காயம்:
இந்திய மகளிர் அணிக்கு மற்றொரு மோசமான செய்தி என்னவென்றால் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் தற்போது காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியின் போது தோளில் காயம் ஏற்பட்டது.
முன்னதாக இதுகுறித்து பேசிய கவுர், “உடல் நலமாக இருக்கிறது. ஓய்வு எடுத்தால் காயம் சரியாகிவிடும்.” என்றார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை:
தேதி |
அணிகள் |
நேரம் & இடம் |
10 பிப்ரவரி |
தென்னாப்பிரிக்கா vs இலங்கை |
இரவு 10.30 (கேப் டவுன்) |
11 பிப்ரவரி |
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து |
மாலை 6.30 (பார்ல்) |
11 பிப்ரவரி |
ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து |
இரவு 10.30 (பார்ல்) |
12 பிப்ரவரி |
இந்தியா vs பாகிஸ்தான் |
மாலை 6.30 (கேப் டவுன்) |
12 பிப்ரவரி |
பங்களாதேஷ் vs இலங்கை |
இரவு 10.30 (கேப் டவுன்) |
13 பிப்ரவரி |
அயர்லாந்து vs இங்கிலாந்து |
மாலை 6.30 (பார்ல்) |
13 பிப்ரவரி |
தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து |
இரவு 10.30 (பார்ல்) |
14 பிப்ரவரி |
ஆஸ்திரேலியா vs பங்களாதேஷ் |
இரவு 10.30 (க்கெபர்ஹா) |
15 பிப்ரவரி |
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா |
மாலை 6.30 (கேப் டவுன்) |
15 பிப்ரவரி |
பாகிஸ்தான் vs அயர்லாந்து |
இரவு 10.30 (கேப் டவுன்) |
16 பிப்ரவரி |
இலங்கை vs ஆஸ்திரேலியா |
மாலை 6.30 மணி (Gqeberha) |
17 பிப்ரவரி |
நியூசிலாந்து vs பங்களாதேஷ் |
மாலை 6.30 (கேப் டவுன்) |
17 பிப்ரவரி |
வெஸ்ட் இண்டீஸ் vs அயர்லாந்து |
இரவு 10.30 (கேப் டவுன்) |
18 பிப்ரவரி |
இங்கிலாந்து vs இந்தியா |
மாலை 6.30 மணி (Gqeberha) |
18 பிப்ரவரி |
தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா |
இரவு 10.30 (க்கெபர்ஹா) |
19 பிப்ரவரி |
பாகிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ் |
மாலை 6.30 (பார்ல்) |
19 பிப்ரவரி |
நியூசிலாந்து vs இலங்கை |
இரவு 10.30 (பார்ல்) |
20 பிப்ரவரி |
அயர்லாந்து vs இந்தியா |
மாலை 6.30 மணி (Gqeberha) |
21 பிப்ரவரி |
இங்கிலாந்து vs பாகிஸ்தான் |
மாலை 6.30 (கேப் டவுன்) |
21 பிப்ரவரி |
தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ் |
இரவு 10.30 (கேப் டவுன்) |
23 பிப்ரவரி |
அரையிறுதி 1 |
மாலை 6.30 (கேப் டவுன்) |
24 பிப்ரவரி |
அரையிறுதி 2 |
மாலை 6.30 (கேப் டவுன்) |
26 பிப்ரவரி |
இறுதிப்போட்டி |
மாலை 6.30 (கேப் டவுன்) |