Shubman Gill: டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய தப்பு பண்ணிட்டேன்.. இனிமேல் பாருங்க! ரூட்டை மாற்றிய சுப்மன் கில்
வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயராவது குறித்து சுப்மன் கில் பேசியுள்ளார்
அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது இந்திய அணி. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை வென்றது. ஆனால் ஒரு நாள் போட்டிகளில் படு மோசமான தோல்வியை சந்தித்தது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. இதனைத்தொடர்ந்து இந்திய அணி தற்போது ஒய்வில் இருக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் உட்பட மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.
வீரர்களை தயார் படுத்தும் பிசிசிஐ:
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளதால் அதற்காக வீரர்களை தயார் படுத்தும் முனைப்பில் நாளை துலீப் டிராபி நடைபெற உள்ளது.
இதில் மொத்தம் நான்கு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டெஸ்ட் போட்டிக்கு தயராவது குறித்து சுப்மன் கில் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எப்படி சிறப்பாக விளையாடுவது என்பதை நான் கற்றுக்கொண்டுள்ளேன். சுழற் பந்துவீச்சு அவர்களுக்கு சாதகமாக இருக்கும் மைதானத்தில் விளையாடும் போது நாம் பந்தை சரியான முறையில் தற்காக்க வேண்டும்.
ரூட்டை மாற்றிய கில்:
அப்படி செய்தால் மட்டுமே உங்களால் ஆட்டம் இழக்காமல் இருக்க முடியும். அதே சமயம் உங்களால் ரன் சேர்க்கவும் முடியும். தற்போது டி20 போட்டிகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இது அனைத்தும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் நடக்கிறது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ரன் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே தற்காத்து ஆடும் முறையை பலரும் கைவிட்டு விடுகிறார்கள். எனவே பந்தை தற்காத்து விளையாடும் முறையில் கவனம் இருக்க வேண்டும்"என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,"டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை என் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புக்கு இணையாக என்னால் விளையாட முடியவில்லை. ஆனால் இந்த சீசனில் தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகள் விளையாடப் போகிறோம். இந்த பத்து டெஸ்ட் போட்டிகளையும் நான் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். இந்த பத்து டெஸ்ட் போட்டிகளிலும் என் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யும் வகையில் நான் விளையாடுவேன்"என் கூறியிருக்கிறார் சுப்மன் கில்.
மேலும் படிக்க: Rahul Dravid:பயிற்சியாளரா இல்லைன்னா என்ன.. ஆலோசனை வேணுமா இத பண்ணுங்க! டிராவிட் சொன்ன தகவல்
மேலும் படிக்க: Bajrang Punia:பாஜகவிற்கு எதிராக ஸ்கெட்ச்.. காங்கிரஸில் கைகோர்க்கும் பஜ்ரங் புனியா?