Rahul Dravid:பயிற்சியாளரா இல்லைன்னா என்ன.. ஆலோசனை வேணுமா இத பண்ணுங்க! டிராவிட் சொன்ன தகவல்
கிரிக்கெட் தொடர்பான ஆலோசனைகள் வேண்டும் என்றால் எனக்கு மெயில் அனுப்புங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையை இந்திய அணி தவறவிட்டது. ஆனால் அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது ராகுல் டிராவிட் என்று கூறப்பட்டது. அதன்படி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்த உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணம் ராகுல் டிரவிட் மற்றும் அஜித் அகார்கர் தான் என்று கூறியிருந்தார்.
ஆலோசனை வேண்டுமா மெயில் அனுப்புங்க:
இதனிடையே தலைமைப்பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். அதன்படி இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி வாஸ் அவுட் ஆனது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் கிரிக்கெட் தொடர்பான ஆலோசனைகள் வேண்டும் என்றால் தனக்கு மெயில் அனுப்புங்கள் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"டி20 உலகக் கோப்பை வெற்றி எப்போதும் அழகான ஒன்றாக இருக்கும். வெற்றியடைவதைவிட தோல்வி சில நேரங்களில் நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கும்.
What's #RahulDravid up to after coaching Team India? 🤔
— Star Sports (@StarSportsIndia) September 3, 2024
Watch as the former Indian head coach talks about the story behind his unexpected celebration and shares his future plans! 😮👏🏼
Watch the Full episode - CEAT Cricket Awards on YouTube channel pic.twitter.com/sVgO1ak3RV
இந்த நிகழ்ச்சியில் நாம் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற தருணத்தை நீங்கள் வீடியோவாக ஒளிப்பரப்புவது பார்ப்பதற்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. உங்களுக்கு கிரிக்கெட் தொடர்பான ஏதாவது ஆலோசனைகள் வேண்டும் என்றால் எனக்கு மெயில் அனுப்புங்கள்"என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.