Shubman Gill: சுப்மன் கில்லை சச்சின், விராட்டுடன் ஒப்பிடாதீங்க.. - முன்னாள் இந்திய பயிற்சியாளர்
Shubman Gill: உலகடெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி வரும் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உலகடெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி வரும் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஐபிஎல் தொடரை முடித்த கையுடன் லண்டனுக்கு புறப்பட்டு பயிற்சியில் ஈடுபடத்துவங்கிவிட்டது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியோ, கோப்பையை கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற முடிவில், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னரே லண்டனில் முகாமிட்டு, பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த போட்டி தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் இறுதிப் போட்டியில் களமிறங்கும் வீரர்கள் என அனைவரும் விராட் கோலி குறித்து தங்களது எண்ணங்களை கூறி வந்தனர். ஆனால் யாரும் இதுவரை சுப்மன் கில் குறித்து வாய்திறக்காமல் உள்ளனர். சுப்மன் கில்லுக்கு ஆஸ்திரேலிய அணி தனித்திட்டத்துடன் காத்திருக்கலாம். ஆனால் கில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளாசிய மூன்று சதங்கள் குறித்து யோசித்துப் பார்த்தால் ஆஸ்திரேலிய அணியின் திட்டங்கள் எந்த அளவுக்கு சுப்மன் கில்லுக்கு எதிராக எடுபடும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுப்மன் கில்லை பலர் கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் தெண்டுல்கருடனும், ரன் மிஷின் எனப்படும் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துவிட்டார்கள். இது குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன்,
கில் இப்போது மீண்டும் டீம் இந்தியாவுக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார். “அனைத்து வடிவங்களிலும், இந்தியாவுக்கான சிறந்த வீரராக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் ஷுப்மனுக்கு உள்ளது. மற்ற வீரரைப் போலவே அவர் சவால்களையும் தடைகளையும் சந்திக்க நேரிடும்; அவர் அவற்றை எவ்வாறு கையாளுகிறார் என்பதைப் பொறுத்து தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கை இருக்கும். மேலும், தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கும் அவருக்கு நம்பகமான ஆலோசனைகளை வழங்கக்கூடியவர்களுடன் ஈடுபடுவதற்கும் நான் அவரை ஊக்குவிப்பேன்,” என்று கேரி கிர்ஸ்டன் கூறினார்.
இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 28 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 890 ரன்கள் சேர்த்துள்ளார். அதில் இரண்டு சதங்கஉம் 4 அரைசதங்களும் விளாசியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 128ஆக உள்ளது. டெஸ்ட் போட்டியில் இவரது ஸ்டைரைக் ரேட் 57.64 ஆக உள்ளது. அதேபோல், இவரது ஆவரேஜ் 34.29ஆக உள்ளது.
மேலும் படிக்க,