WTC Final 2023: “இந்தியாவ சமாளிச்சுடலாம்.. ஆனால் கோலியை நெனச்சாதான் பயமா இருக்கு” - வீடியோவில் ஆஸ்திரேலிய அணி..!
WTC Final 2023: இந்திய கிரிக்கெட் அணி என்பது விராட் கோலி தான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் வீடியோ ஒன்றில் கூறியுள்ளனர்.
WTC Final 2023: இந்திய கிரிக்கெட் அணி என்பது விராட் கோலி தான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் வீடியோ ஒன்றில் கூறியுள்ளனர். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தற்போது மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள போட்டி உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தான். இந்த போட்டி குறித்து பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துகளை கூறி வரும் நிலையில், போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் நாயகன் விராட் கோலி குறித்து கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் நடைபெறும் WTC இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், விராட்டை "நல்ல வீரர். எப்போதும் போட்டிக்கு தயாராகத்தான் இருப்பார்" என்று வர்ணித்தார்.
”விராட்கோலி ஒரு சூப்பர் ஸ்டார். அவர் எங்களுக்கு எதிராக மிகவும் சிறப்பாக விளையாட எப்போதும் விரும்புகிறார். அவர் எப்பொழுதும் எங்களுக்கு எதிராக ரன்களை அடிப்பார், இந்த வாரம் நாங்கள் அவரை அமைதியாக வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன்" என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்ஸ்மித் கூறினார்.
தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விராட்டை "நம்பமுடியாத கவர் டிரைவ்" விளையாடும் வீரர் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
View this post on Instagram
மார்னஸ் லாபுஷாக்னே, "எல்லா காலத்திலும் சிறந்தவர்களில் ஒருவர். அனைத்து வடிவத்திலும் சிறந்தவர். இந்த வாரம் அப்படி இருக்கமாட்டார் என்று நம்புகிறேன் " என்று அவர் கூறினார்.
விராட்தான் ‘இந்தியாவின் நாயகன்’ என்று ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விராட்டை "இந்திய மிடில் ஆர்டரின் திறமையான முதுகெலும்பு" என்று கூறினார்.
விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 24 டெஸ்ட் போட்டிகளில் விளையடியுள்ளார். அதில் அவர் 48.26 சராசரியில் 1,979 ரன்கள் எடுத்துள்ளார், இதில் எட்டு சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்கள்அடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவரது சிறந்த ஸ்கோர் 186. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும், விராட் 92 போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 50.97 சராசரியில் 4,945 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 186. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 16 சதங்கள் மற்றும் 24 அரைசதங்கள் அடித்துள்ளார்.
மேலும் படிக்க..,