Watch Video: உங்களுக்கு தேவைப்படும்போது... ஷேன் வார்னே குறித்த ரகசியத்தைச் சொல்லி கதறி அழுத ரிக்கி பாண்டிங்..
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் ஷேன் வார்ன் சிலைக்கு வெளியே ரசிகர்கள் தொடர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னுக்கு அஞ்சலி செலுத்தும் போது ரிக்கி பாண்டிங் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன் பாண்டிங், லெக் ஸ்பின் ஜாம்பவான் ஷேன் வார்ன் இருவரும் விளையாடும் நாட்களில் சிறந்த நண்பர்களாக இருந்தனர். சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் அஞ்சலியின் போது கண்ணீரை அடக்க முடியாமல் அழுத ரிக்கி பாண்டிங், கிரிக்கெட்டில் தான் சந்தித்த சிறந்த பந்து வீச்சாளர் வார்னே என்று கூறினார்.
ஷேன் வார்னே குறித்து பாண்டிங் கூறுகையில், “இதை வார்த்தைகளில் சொல்வது கடினம். நான் 15 வயதில் அகாடமியில் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அவர் எனக்கு என் புனைப்பெயரைக் கொடுத்தார். நாங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அணி வீரர்களாக இருந்தோம். எல்லா உயர்வையும் தாழ்வையும் ஒன்றாகச் சவாரி செய்தோம். எல்லாவற்றிலும் அவர் நீங்கள் எப்போதும் நம்பக்கூடிய ஒருவர், அவருடைய குடும்பத்தை நேசிப்பவர். உங்களுக்குத் தேவைப்படும்போது உங்களுடன் இருப்பவர். எப்போதும் தனது துணையை முதன்மைப்படுத்துபவர். சிறந்த பந்து வீச்சாளர்” என்று கூறினார்.
#RickyPonting breaks down with tears on #ShaneWarne death#RIPKing pic.twitter.com/hQYaEqYdPu
— Shehzad Gul Hassan (@ShehzadGul89) March 6, 2022
🚨 Tears in Ricky Ponting 😢
— Tahir khan (@tahirthe12thman) March 6, 2022
Ricky Ponting breaks down in tears as he pays tribute to Shane Warne
“ University of Leg spin “
Closed permanently 🛑#ShaneWarne #ShaneWarneDeath #ShaneWarneRIP #RickyPonting pic.twitter.com/y8rh9EJ5jC
இதற்கிடையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னின் குடும்பத்தினர் அரசு இறுதிச் சடங்கை ஏற்றுக்கொண்டதாக விக்டோரியா மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் நேற்று அறிவித்தார். 'சுழல் மன்னன்' என்று பரவலாகக் கருதப்படும் வார்ன், தாய்லாந்தில் சந்தேகத்திற்கிடமான மாரடைப்பால் 52 வயதில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
விக்டோரியாவைச் சேர்ந்த சுழல் மன்னருக்கு நிரந்தர அஞ்சலி செலுத்தும் வகையில், MCG மைதானத்தில் உள்ள கிரேட் சதர்ன் ஸ்டாண்ட் “SK வார்ன் ஸ்டாண்ட்” என மறுபெயரிடப்படும் என்றும் ஆண்ட்ரூஸ் அறிவித்துள்ளார். வார்னே இங்கு தான் ஹாட்ரிக் மற்றும் 700வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் ஷேன் வார்ன் சிலைக்கு வெளியே ரசிகர்கள் தொடர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்