மேலும் அறிய

Sanjay Manjrekar on Jadeja : "என்னுடன் பேச சம்மதம்தானே...?" பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஜடேஜாவிடம் கேட்ட மஞ்ச்ரேக்கர்..!

Asia Cup : பாகிஸ்தான் வெற்றிக்கு பிறகான பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஜடேஜாவுடன் சஞ்சய் மஞ்ச்ரேகே்கர் பேசியது வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ரோகித்சர்மா, விராட்கோலி ஆட்டமிழந்த பிறகு இக்கட்டான நேரத்தில் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ரவீந்திர ஜடேஜாவும், ஹர்திக் பாண்ட்யாவும் வெற்றி பெற வைத்தனர்.

போட்டியின் வெற்றிக்கு பிறகு, வெற்றிக்கு காரணமான ஜடேஜா பரிசளிப்பு விழாவிற்கு வந்தபோது அவரை பிரபல வர்ணனையாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி எடுத்தார். அப்போது, அவர் ஜடேஜாவிடம், “ இங்கே ஜடேஜா என்னுடன் உள்ளார். அவரிடம் முதல் கேள்வி. என்னுடன் பேச உங்களுக்கு சம்மதம்தானே..?” என்று கேட்டார்.


Sanjay Manjrekar on Jadeja :

அதற்கு பதிலளித்த ஜடேஜா, “ ஆம்.ஆம். கண்டிப்பாக. எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை” என்று பதிலளித்தார். இந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த காலங்களில் ரவீந்திர ஜடேஜாவை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மிக கடுமையாக விமர்சித்து வந்தார். 2019ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது அவரை துண்டு துணுக்கு வீரர் என்று விமர்சித்திருந்தார். மஞ்ச்ரேக்கரின் தரம் தாழ்ந்த விமர்சனத்தால் அவருக்கு கண்டனங்கள் குவிந்தது.

மேலும் படிக்க : Asia Cup IND vs PAK : ஹர்திக், ஜடேஜா அபார பேட்டிங்..! பாகிஸ்தானை பழிதீர்த்த இந்தியா..! கடைசி ஓவரில் திரில் வெற்றி..!

ஆனால், அந்த உலககோப்பையில் ஜடேஜா அரையிறுதியில் தனி ஆளாக இந்திய அணிக்காக போராடினார். இந்திய அணி தோற்றாலும் ஜடேஜாவின் திறமையை அனைவரும் பாராட்டினர்.  மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா தோற்ற பிறகு, ஜடேஜாவை இந்திய அணிக்காக களமிறக்கியது தவறு, அவரை ஒரு பேட்ஸ்மேனாக நான் கருத மாட்டேன் என்று மஞ்ச்ரேக்கர் மீண்டும் மட்டம் தட்டி விமர்சித்திருந்தார். மஞ்ச்ரேக்கருக்கு பதிலா விஹாரியை களமிறக்கியிருக்கலாம் என்றும் கூறினார்.


Sanjay Manjrekar on Jadeja :

மஞ்ச்ரேக்கர் தொடர்ந்து ஜடேஜாவின் திறமையை குறைத்து மதிப்பிட்டாலும் இந்திய அணியின் நம்பர் 1 ஆல்ரவுண்டர் என்ற பெருமையை ஜடேஜாதான் தற்போது அலங்கரித்து வருகிறார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்திலும் கலக்கி வரும் ஜடேஜா, டெஸ்ட் போட்டிகளில் உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டராக ஐ.சி.சி. தரவரிசையில் உள்ளார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 37 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 சதங்கள், 1 இரட்டை சதம், 9 அரைசதம் உள்பட 2043 ரன்களை குவித்துள்ளார். 74 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம் 15 அரைசதங்களுடன் 1994 ரன்களை குவித்துள்ளார். 1987ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அவர் கிரிக்கெட் ஆடியுள்ளார்.

மேலும் படிக்க : IND vs PAK, Asia Cup Win: ஒளியே வழியாக மலையே படியாக..இனிஒரு விதி செய்வோம்.. இந்திய வெற்றியை கொண்டாடும் மக்கள்

மேலும் படிக்க : IND vs PAK: தர்மம் தோற்காதே ஆளும் காவலனே... ஹர்திக் பாண்ட்யாவிற்கு தலை வணங்கிய கார்த்திக்.. வைரல் படம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Embed widget