Sanath Jayasuriya: அடிதூள்.. இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராகும் சனத் ஜெயசூர்யா! தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
இலங்கை அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர் தோல்வியில் இலங்கை அணி:
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது இலங்கை அணி. அதேபோல், டி20 உலகக் கோப்பையிலும் சொதப்பிய அந்த அணி கத்துக்குட்டி அணிகளிடம் எல்லாம் தோல்வி அடைந்தது. ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் எதிரணியை மிரட்டிய இலங்கை அணி கடந்த காலங்களாக மோசமாக விளையாடி வருவது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் இலங்கை தோல்வியை தழுவிய பிறகு அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட் ராஜினாமா செய்தார். இதனிடையே இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடு உள்ளது. இந்த தொடரில் இலங்கை அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
சனத் ஜெயசூர்யா நியமனம்:
இந்நிலையில் தான் இலங்கை அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6973 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல் ஒரு நாள் போட்டிகளை பொறுத்தவரை 445 ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.
Sanath Jayasuriya is likely to be the head coach of the Sri Lankan team for the India series. [AFP] pic.twitter.com/IdFTUIcxi0
— Johns. (@CricCrazyJohns) July 8, 2024
அதில், 13,430 ரன்களை குவித்துள்ளார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் சனத் ஜெயசூர்யா. இச்சூழலில் தான் செப்டம்பரில் இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடியும் வரை இடைக்கால தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா செயல்படுவார் என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
மேலும் படிக்க: BCCI: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி - ஒவ்வொரு வீரருக்கும் இத்தனை கோடிகளா? மொத்த லிஸ்ட் இதோ!
மேலும் படிக்க: Abhishek Sharma: ரசிகர்களே! அபிஷேக் சர்மா விளையாடுன பேட் யாரோடது தெரியுமா?