Sachin Tendulkar: 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்.. லாராவின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்த சச்சின்!
15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஒரு வரலாற்று சாதனை படைத்தார்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வரலாற்றில், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை செய்த தினம் இன்று (அக்டோபர் 17) . அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
கிரிக்கெட் என்றால் சச்சின், சச்சின் என்றால் கிரிக்கெட் என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு சாதனைகளை படைத்த சாதனை மன்னன் சச்சின் டெண்டுகல்கர். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கர் இதே நாளில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் சாதனையை செய்தார்.
லாராவின் சாதனையை முறியடித்த சச்சின்:
முன்னதாக, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா தன்வசம் வைத்திருந்தார்.
அதன்படி, மொத்தம் 131 டெஸ்ட் போட்டிகளில் 232 இன்னிங்ஸ்கள் விளையாடிய பிரையன் லார 11,953 ரன்கள் குவித்திருந்தார். அதில் மொத்தம் 34 சதங்களும், 8 இரட்டை சதங்களும், 48 அரைசதங்களும் அடக்கம்.
இந்நிலையில்தான் லாரா, கடந்த 2006 ஆம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியுடன் ஓய்வு பெற்றார். இதனிடயே, பிரைன்லாராவின் வரலாற்று சாதனையை நெருங்கி கொண்டிருந்தார் இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின்.
அப்போது, இந்த சூழலின்போது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அந்த நாள் வந்தது. ஆம், அக்டோபர் 17, 2008. அன்றைய தினம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி அங்கு அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
2008 அக்டோபர் 17:
அதன்படி, 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 17 தேதி மொஹாலியில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்தார்.
முன்னதாக, அந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் வீசிய பந்தை ஓங்கி அடித்தார் சச்சின்... பந்து வேகமாக எல்லை கோட்டை நோக்கி பறந்தது. அந்த பந்தில் மொத்தம் மூன்று ரன்கள் பெற்றார் சச்சின். மைதானம் முழுவதும் கர ஒலி. ரசிகர்கள் ஆரவாரம். .
Sachin Tendulkar surpassed Brian Lara's tally to become the leading run scorer in Test cricket on this day 15 years ago.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 17, 2023
- The whole crowd celebrated this monumental milestone and the match was paused for a bit. pic.twitter.com/AZSIocHW2A
ஆம், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் பிரைன் லாரா என்ற வரலாற்று சாதனையை முறியடித்தார் சச்சின் டெண்டுல்கர்.
முன்னதாக அந்த போட்டியில் சச்சின் 88 ரன்கள் எடுத்தார். இதனிடையே, அவர் விளையாடிய 200 டெஸ்ட் போட்டிகளின் 329 இன்னிங்ஸ்களில் 15921 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Gurbaz: சதம் அடிக்காத விரக்தி! பேட்டால் நாற்காலியை தாக்கிய குர்பாஸ்... ஐசிசி எடுத்த அதிரடி நடவடிக்கை..!
மேலும் படிக்க: SA Vs NED Score LIVE: மீண்டும் விளையாடும் மழை.. நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்து வீச முடிவு