Ayodhya Ram Mandir Invitation: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா.. சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சனுக்கு அழைப்பு..
ராமர் கோவில் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த, அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,
ராமர் கோவில் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
ராமர் கோவில்:
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. சுமார், 57 ஏக்கர் பரப்பளவில் கோவில் வளாகமும், 10 ஏக்கர் பரப்பளவில் கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், இந்த கோவில் வளாகத்தில் அருங்காட்சியகம், உணவகம் உள்பட பல்வேறு வசதிகள் பக்தர்களுக்காக செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவில் கட்டுமான பணிக்காக ரூ.1800 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் அமைக்கப்பட்டு வரும் ராமர் கோவிலில் 70 ஆயிரம் பேர் வரை ஒரு நேரத்தில் தரிசனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சூழலில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி அன்று ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த திறப்புவிழாவின் போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து மத சாதுக்களும், 136 மடாதிபதிகளும் பங்கேற்க உள்ளனர்.
திறப்பு விழாவின் போது செய்தி சேகரிப்பதற்காக பல்வேறு நாடுகளிலும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களும் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற ராமர் கோவில் நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து திறப்பு விழாவில் பங்குபெற அழைப்புவிடுத்தனர். அதன்படி, பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள உள்ளனர்.
சச்சின் மற்றும் விராட் கோலிக்கு அழைப்பு:
இந்நிலையில்தான் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்குபெற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் ஷர்மா உட்பட பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் பங்குபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மேலும், பாலிவுட் திரைபிரபலங்கள் மற்றும் பக்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் திறப்பு வி.ழா அன்று கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொது செயலாளர் சம்பத் ராய் கூறும்போது, சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் வருகிற ஜனவரி 15-க்குள் நிறைவடைந்து விடும். அதன்பின் ஜனவரி 16-ந்தேதி பிரான் பிரதிஷ்தா பூஜை தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு 2,200 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புத்த மத தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர், அருண் கோயல், நடிகை மாதுரி திக்ஸிட், திரைப்பட இயக்குனர் மதூர் பண்டார்கர், தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ஓவியக் கலைஞர் வாசுதேவ் காமத், இஸ்ரோ இயக்குனர் நிலேஷ் தேசாய் மற்றும் பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 22 ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும் நிலையில், ஜனவரி 23 ஆம் தேதி முதல் மக்கள் ராமர் கோயிலில் தரிசனம் செய்யலாம என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவிற்கு முன்னதாகவே அயோத்தி நகர் முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் வரும். மேலும் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகுதான் திறப்பு விழாவில் பங்கேற்க முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் உத்தரப்பிரதேச அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Glenn Maxwell: நடக்க முடியாதவரை விளையாடுவேன்... ஆனால் ஆஸ்திரேலிய அணிக்காக இல்லை - மேக்ஸ்வெல் ஓபன்டாக்!
மேலும் படிக்க: PKL Season 10: புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் தமிழ் தலைவாஸ்...முதல் இடத்தில் யார் தெரியுமா? விவரம் இதோ!