SA vs IND, 1st ODI: அதே பழைய ஆக்ரோஷம்.. பவுமாவிடம் முறைத்து கொண்ட கோலி... வைரலாகும் வீடியோ
பவுமா - வான் டர் டுசன் ஜோடி 204 ரன்கள் குவித்தனர். இதனால், 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது தென்னாப்ரிக்க அணி.
தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் பவுமா, வான் டர் டுசனின் சதங்களால் இந்திய அணி வெற்றி பெற 297 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது தென்னாப்ரிக்க அணி.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டனாக கே.எல்.ராகுல் இன்று தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கினார். இந்த போட்டியில் விளையாடுவது மூலம், தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு கோலி விளைஅயாடும் முதல் ஒரு நாள் போட்டி இது. இந்நிலையில், தென்னாப்ரிக்கா பேட்டிங் செய்த இன்னிங்ஸின்போது, தென்னாப்ரிக்க கேப்டன் பவுமா பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
சாஹல் வீசிய 36வது ஓவரின்போது, பந்தை எதிர்கொண்ட பவுமா ரன் ஏதும் எடுக்கவில்லை. டாட்டான அந்த பந்தை பிடித்த கோலி, விக்கெட் கீப்பரை நோக்கி எறிந்தார். அப்போது மீண்டும் ஃபீல்டிங் பொசிஷனுக்கு திரும்பி கொண்டிருந்த கோலி, பவுமாவைப் பார்த்து காரசாரமாக பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோலி என்ன பேசினார் என்பது தெளிவாக பதிவாகவில்லை என்றாலும், “நான் இப்போது கேப்டன் இல்லை. அதனால், போட்டி முடிவில் யாரையும் சந்தித்து பேச அவசியமில்லை. க்ரீஸ்விட்டு வெளியே இருந்ததால்தான் பந்தை எறிந்தேன்” என பேசியதாக மைக்கில் ரெக்கார்டு செய்யப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. எனினும் கோலி பேசியவிதம் சரியில்லை என ஒரு தரப்பு கிரிக்கெட் ரசிகர்கள் சாடி வருகின்றனர்.
— Sunaina Gosh (@Sunainagosh7) January 19, 2022
தொடர்ந்து ஆடிய, பவுமா - வான் டர் டுசன் ஜோடி 204 ரன்கள் குவித்தனர். இதனால், 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது தென்னாப்ரிக்க அணி. இந்தத் தொடரை பொறுத்தவரை டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது. ஆகவே ஒருநாள் தொடரை வென்று ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. அனுபவ வீரர் ரோகித் சர்மா அணியில் இல்லாத போதும் தொடக்க ஆட்டக்காரராக ஷிகர் தவான் மீண்டும் அணிக்கு வந்துள்ளார். அரை சதம் அடித்து அணிக்கு பங்காற்றி இருக்கிறார். அவரை அடுத்து கோலியும் அரை சதம் கடந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், வெற்றி பெற இந்திய அணி தடுமாறி வருகிறது. கோலி அவுட்டானபோது பவுமாதான் கேட்ச் பிடித்தார் என்பதை சுட்டி காட்டி நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்