மேலும் அறிய

SA vs IND: கடல் கடந்து கவனிக்க வைத்த ராகுல்.! ஏழாவது சதம் மூலம் பல சாதனைகளை படைத்த துணை கேப்டன் !

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கே.எல்.ராகுல் பல சாதனைகளை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மாயங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் அடித்த மூன்றாவது ஜோடி என்ற பெருமையை ராகுல்-மாயங்க் அகர்வால் ஜோடி பெற்றது. 

 

மாயங்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கேப்டன் விரட் கோலியும் 35 ரன்கள் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 216 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உதவியுடன் சதம் கடந்து அசத்தினார். 

 

இந்த சதத்தின் மூலம் அவர் பல சாதனைகைகளை படைத்துள்ளார். முதலில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தான் விளையாடிய அனைத்து நாடுகளிலும் தற்போது வரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ராகுல் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் இதுவரை 7 சதம் அடித்துள்ளார். அவற்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என அனைத்து நாடுகளிலும் இவர் சதம் கடந்து அசத்தியுள்ளார். 


SA vs IND: கடல் கடந்து கவனிக்க வைத்த ராகுல்.! ஏழாவது சதம் மூலம் பல சாதனைகளை படைத்த துணை கேப்டன் !

இதைபோல் ஆசியாவிற்கு வெளியே அதிகம் சதம் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலிலும் இவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 

 

ஆசியாவிற்கு வெளியே அதிக சதம் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள்:

வீரர்கள்  சதங்கள் 

சுனில் கவாஸ்கர் (81 இன்னிங்ஸ்)

15
கே.எல்.ராகுல்  (34 இன்னிங்ஸ்) 5
வீரேந்திர சேவாக் (59 இன்னிங்ஸ்) 4

வினோ மன்கட் (19 இன்னிங்ஸ்)

3

ரவிசாஸ்திரி (19 இன்னிங்ஸ்)

3

 

இவை தவிர ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளிலும் சதம் கடந்த தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலிலும் கே.எல்.ராகுல் இணைந்துள்ளார். 

 

ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா,இங்கிலாந்தில் சதம் கடந்த தொடக்க ஆட்டக்காரர்கள்:

சையித் அன்வர் (பாகிஸ்தான்)

கிறிஸ் கெயில்(வெஸ்ட் இண்டீஸ்)

கே.எல்.ராகுல்(இந்தியா)

இவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 7 சதங்களில் பல சாதனை பட்டியலில் கே.எல்.ராகுல் இணைந்துள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பிற்கு வந்த பிறகு முதல் போட்டியிலேயே சதம் கடந்து இவர் அசத்தியுள்ளார். 

மேலும் படிக்க: தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் சதம்.. நிதானமாக செய்கை செய்த ராகுல்.!

தலைப்பு செய்திகள்

Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget