மேலும் அறிய

திணறும் தவான்… அன்ஃபிட் ஹர்திக்… கெய்க்வாட், வெங்கடேஷை பிக் செய்யுமா ரோஹித் படை!

ருதுராஜ் கெய்க்வாட் 3 சதங்களும், வெங்கடேஷ் 2 சதங்களுடன் 10 ஓவர்கள் வரை பந்துவீச முடிகிறது என்பது அவரின் தேர்வைக் கூடுதலாக நியாயப்படுத்துகிறது. ஹர்திக் பாண்டியா முழுமையாகத் தேறவில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில் ஷிகர் தவணுக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும், ஹர்திக் பாண்டியாவுக்கு வெங்கடேஷ் ஐயரும் கடும் போட்டியளிக்கிறார்கள். உள்நாட்டில் நடந்துவரும் விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் ஷிகர் தவண் தொடர்ந்து சொதப்பி வருகிறார். ஃபார்மில்லாமல் தவித்து வருவதால், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கான வாய்ப்பு அகன்றுள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நாள் போட்டிக்கான அணி மட்டும் இன்னும் தேர்வாகவில்லை. விஜய் ஹசாரே கோப்பையில் வீரர்கள் விளையாடுவதைப் பார்த்துதான் பிசிசிஐ தேர்வுக்குழு அணியைத் தேர்வு செய்ய இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது, இளம் வீரர்கள் இதற்காக விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டிகளில் அதகளப் படுத்தி வருகின்றனர், ஹர்திக் பாண்டியாவின் கரியரைக் காலி செய்யக் காத்திருக்கும் மத்தியப் பிரதேச வீரர் வெங்கடேஷ் அய்யர் நேற்று சண்டிகர் அணிக்கு எதிராக 151 ரன்களை வெளுத்து வாங்கினார். ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப சரியான ஒரு ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளார், என்று கிரிக்கெட் வட்டாரம் பேசுகிறது.

திணறும் தவான்… அன்ஃபிட் ஹர்திக்… கெய்க்வாட், வெங்கடேஷை பிக் செய்யுமா ரோஹித் படை!

ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் ஃபிட்னஸ் காரணத்தால் டெஸ்ட் போட்டியிலிருந்து விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஒருநாள் அணியிலும் கூட அவருக்கு இடம் கிடைக்காது போல் தெரிகிறது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் 3 சதங்களும், வெங்கடேஷ் 2 சதங்களையும் விஜய் ஹசாரேயில் அடித்து ஃபார்மை நிரூபித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் நடுப்பகுதியில் 10 ஓவர்கள் வரைவீசிய பல முக்கியமான விக்கெட்டுகளை விஜய் ஹசாரே கோப்பையில் வெங்கடேஷ் வீழ்த்தியிருப்பதால், ஹர்திக் பாண்டியா தேவை குறைந்து வருகிறது. பிசிசிஐ அமைப்பின் தேர்வுக்குழுவில் உள்ள முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய ஒருநாள் அணியில் நிச்சயம் வெங்கடேஷ் ஐயர் இடம் பெறுவார். அவரால் 9 முதல் 10 ஓவர்கள் வரை பந்துவீச முடிகிறது என்பது அவரின் தேர்வைக் கூடுதலாக நியாயப்படுத்துகிறது. ஹர்திக் பாண்டியா முழுமையாகத் தேறவில்லை. ஆதலால், ஹர்திக் பாண்டியா களமிறங்கும் நடுப்பகுதியில் ஆல்ரவுண்டருக்கு வெங்கடேஷைப் பயன்படுத்தலாம். விஜய் ஹசாரே கோப்பைவரை வெங்கடேஷுக்குக் காயம் ஏதும் ஏற்படாவிட்டால் நிச்சயம் அவர் தென் ஆப்பிரிக்கா செல்வார்” எனத் தெரிவித்தார்.

திணறும் தவான்… அன்ஃபிட் ஹர்திக்… கெய்க்வாட், வெங்கடேஷை பிக் செய்யுமா ரோஹித் படை!

சண்டிகர் பவுலர் ஜெகஜித் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மத்தியப் பிரதேச அணி 14வது ஓவரில் 56/4 என்று தடுமாறி வந்தது, அப்போது 6ம் நிலையில் இறங்கிய வெங்கடேஷ் அய்யர், முதலில் கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவாவுடன் சேர்ந்து 122 ரன்கள் கூட்டணி அமைத்தார், ஸ்ரீவஸ்தவா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 80 பந்துகளில் 70 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். கடைசியில் புனீத் தாதே, குமார் கார்த்திகேயா இறங்கி சிறு அதிரடி இன்னிங்ஸை ஆட மத்தியப் பிரதேச அணி 331/9 என்ற ஸ்கோரை எட்டியது. வெங்கடேஷ் அய்யர் சிக்சர் மழை பொழிய கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் விளாசப்பட்டது. மத்திய பிரதேச அணி 331 ரன்கள் எடுத்தாலும் சண்டிகர் மகாவிரட்டலில் ஈடுபட்டது அந்த அணி, 13.2 ஓவர்களில் 77/3 என்று குறுக்கப்பட்டாலும், தொடக்க வீரரும் கேப்டனுமான மனன் வோரா 95 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 105 ரன்கள் விளாசினார். இவருடன் அன்கிட் கவுஷிக் நின்று 119 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 111 ரன்களை எடுக்க இருவரும் சேர்ந்து 166 ரன்கள் சேர்த்தனர். இதனால் இலக்கை விரட்டி ஒரு அதிர்ச்சித் தோல்வியை மத்தியப் பிரதேசத்துக்கு அளித்து வெங்கடேஷ் அய்யரின் அதிரடிக்கு பதிலடி கொடுக்க முனைந்தது, ஆனால் 326 ரன்கள் என்று வெகுநெருக்கமாக வந்து தோல்வி தழுவியது. வெங்கடேஷ் அய்யர் 10 ஒவர்களில் 64 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக குரீந்தர் சிங் என்ற அதிரடி வீரர் 12 பந்தில் 18 ரன்கள் எடுத்து அபாயகரமாக திகழ்ந்த போது அவரை வெங்கடேஷ் அய்யர் வீழ்த்தினார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கெய்க்வாட் தேர்வு பெற்றாலும் ஒரு போட்டியில்கூட களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. 

திணறும் தவான்… அன்ஃபிட் ஹர்திக்… கெய்க்வாட், வெங்கடேஷை பிக் செய்யுமா ரோஹித் படை!

கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா ஆகிய இரு ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரர்கள் இருக்கும்போது ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், தவணுக்கு வழங்கப்படும் ரிசர்வ் வீரர் வாய்ப்பு ருதுராஜ் கெய்க்வாட்டுக்குச் செல்லலாம். நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரிலும் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷன் என டாப் ஆர்டரில் வலிமையான வீரர்கள் இருப்பதால், கெய்க்வாட் கடும் போட்டியை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆனால், மறுபுறம் ஷிகர் தவணின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் 0,12,14, 18 ரன்கள் என 4 போட்டிகளிலும் ஃபார்மில்லாமல் இருக்கிறார். இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் தேர்வு செய்யப்படுவாரா என்பது சந்தேகம்தான். ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பி பெற்ற சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட், தொடக்க வீரருக்கான போட்டியில் இருக்கிறார். கெய்க்வாட் விஜய் ஹசாரே கோப்பையில் அடுத்தடுத்து 2 சதங்கள் அடித்தது தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. காத்திருப்பு தொடக்க வீரர் தேவை என்பதால், தவணுக்குப் பதிலாக கெய்க்வாட் தேர்வாகலாம். ஆனால் சீனியர் வீரர்களை மதிக்க வேண்டும், வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால்தான் ரஹானே, இஷாந்த் சர்மாவுக்கு மீண்டும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளனர். அந்தக் கோணத்தில் தவணுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், ரன்கள் அடிப்படையில், ஃபார்ம் அடிப்படையில் தேர்வாளர்கள் முடிவு செய்தால், கெய்க்வாட்டுக்கு முதலில் இடம் கிடைக்கும். தவண் ஓரங்கட்டப்படுவார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Embed widget