மேலும் அறிய

Rohit Sharma Record: 550 சிக்ஸர்களை எட்டிய முதல் இந்தியன்.. புதிய வரலாறு படைத்த ரோகித்சர்மா!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியில் 550 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாறு படைத்தார்.

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலிகய அணி இந்திய அணிக்கு 353 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. மெகா இலக்கை நோக்கி வாஷிங்டன் சுந்தருடன் ஆட்டத்தை தொடங்கிய கேப்டன் ரோகித்சர்மா ஆட்டம் தொடங்கியது முதல் அதிரடியாக ஆடினர்.

550 சிக்ஸர்கள்:

பவுண்டரி, சிக்ஸர் என ரசிகர்களை குஷிப்படுத்தியதுடன் இந்தியாவின் ஸ்கோரையும் ஏற்றினார். வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களில் அவுட்டானாலும் விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினார். அபாரமாக ஆடி அரைசதம் அடித்த அவர் இந்த போட்டியில் 57 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர் விளாசியிருந்த நிலையில் 81 ரன்களில் அவுட்டானார்.

ஹிட் மேன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ரோகித்சர்மா இந்த போட்டியில் புதிய வரலாறு படைத்தார். அதாவது, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என ஆகிய 3 வடிவ போட்டிகளிலும் சேர்த்து 550 சிக்ஸர்களை விளாசியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 550 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

கெயிலுக்கு அடுத்து ரோகித்:

அதேபோல, ஒட்டுமொத்த கிரிக்கெட் அரங்கில் 550 சிக்ஸர்களை எட்டிய 2வது வீரர் என்ற சாதனையையும் ரோகித்சர்மா படைத்துள்ளார். முதலிடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் உள்ளார். கிறிஸ் கெயில் 548 இன்னிங்சில் படைத்த இந்த சாதனையை, ரோகித் சர்மாவும் தன்னுடைய 471வது இன்னிங்சில் படைத்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக கிறிஸ் கெயில் சர்வதேச அரங்கில் 553 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். ரோகித்சர்மா 551 சிக்ஸர்களுடன் 2வது இடத்தில் உள்ளார். ரோகித்சர்மா அடுத்து உலகக்கோப்பை தொடரில் ஆட உள்ளதால் அவர் நிச்சயமாக கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா தடுமாற்றம்:

37 வயதான ரோகித்சர்மா டெஸ்ட் போட்டிகளில் 77 சிக்ஸர்களையும், ஒருநாள் போட்டியில் 292 சிக்ஸர்களையும், டி20யில் 182 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 3 ஆயிரத்து 677 ரன்களையும், ஒருநாள் போட்டியில் 10 ஆயிரத்து 112 ரன்களையும், டி20யில் 3 ஆயிரத்து 853 ரன்களையும் விளாசியுள்ளார். இதுதவிர, 243 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 6211 ரன்களை அடித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் மட்டும் 257 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

இதுமட்டுமின்றி ரோகித்சர்மா கடைசியாக ஆடிய 23 ஒருநாள் போட்டிகளில் 9 அரைசதங்களும், 1 சதமும் விளாசியுள்ளார். இன்றைய போட்டியில் தன்னுடைய 30வது அரைசதத்தை ரோகித்சர்மா அடித்தார். ரோகித் சர்மா ஆட்டமிழந்த பிறகு விராட்கோலியும் 51 ரன்களில் அவுட்டானார். தற்போது வரை இந்திய அணி 27.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களுடன் ஆடி வருகிறது. கே.எல்.ராகுல் - ஸ்ரேயாஸ் அய்யர் ஆடி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget