Rohit sharma : ரோகித் சர்மாவுக்கு கட்டாய ஓய்வு? சிட்னியில் கேப்டனான பும்ரா.. கம்பீரின் அதிரடி முடிவு
Ind vs Aus 2024: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்டில் இருந்து ரோஹித் ஷர்மா விலகியுள்ள நிலையில் ஜஸ்பீரித் பும்ரா இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு 'ஓய்வு' அளிக்கப்பட உள்ளது. அவருக்குப் பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தவுள்ளார் என்று தெரிகிறது.
மோசமான ஃபார்மில் ரோகித்:
பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 2-1 என்கிற கணக்கில் பின் தங்கியுள்ளது, இந்த தொடரை இந்திய அணி அபாரமாக வெற்றியுடன் தொடங்கினாலும் 2வது மற்றும் 4வது டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம் கடந்த சில போட்டிகளாகவே மிக மோசமாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: Shubman Gill: சிட் ஃபண்ட் மோசடி! கைது அபாயத்தில் சுப்மன் கில்.. நடந்தது என்ன?
கடைசி 10 டெஸ்டில் அவரது பேட்டிங் சராசரி 10-க்கும் கீழ் குறைவாகவே உள்ளது, மேலும் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஒயிட் வாஷ் ஆனது, இதனால் அவரது கேப்டன்சி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வந்தத.
ரோகித் விலகல்:
இந்த நிலையில் தான் ரோகித் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஜஸ்பீரித் பும்ரா வழிநடத்துவுள்ளார் என்று தெரிகிறது. ஏற்கெனவே முதல் டெஸ்டில் பும்ரா தலைமையில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.
இந்த போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ள நிலையில் கடந்த போட்டியில் பெஞ்ச் செய்யப்பட்ட ஷுப்மான் கில், 3வது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்குவார். கடந்த போட்டியில் 3வது இடத்தில் பேட் செய்த கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்குவார். அதே போல பந்துவீச்சில் காயம் அடைந்த ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா களமிறங்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
🚨 ROHIT SHARMA HAS OPTED OUT OF THE 5th TEST 🚨
— Johns. (@CricCrazyJohns) January 2, 2025
- Bumrah to lead, Gill to bat at number 3 & KL Rahul to open - Prasidh Krishna is set to play. [pdevendra from Express Sports] pic.twitter.com/8TnmQMJMlD
வாழ்வா சாவா போட்டி:
ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது, சிட்னி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு வாழ்வா சாவா போட்டியாக மாறியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டுமென்றால் நம்பிக்கையைத் சிட்னியில் வெற்றி பெறுவது அவசியம். ஒரு வேளை இந்த போட்டியில் தோற்றாலோ அல்லது டிரா செய்தலோ இந்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாது.
இதையும் படிங்க: இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
உத்தேச அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா(C), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.