T20 World Cup 2024: டி20 கேப்டனாக ’ஹிட் மேன்’ ரோஹித் ஷர்மாவின் சாதனை! விவரம் உள்ளே!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் நிலவுகிறது.
டி20 உலகக் கோப்பை:
டி20 உலகக் கோப்பை 2024 கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (ஜூன் 7) நடைபெறும் போட்டியில் கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பைக்கு பிறகு இரு அணியும் நேரடியாக மோதுவதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் டி20 போட்டிகளில் கேப்டனாக இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா செய்துள்ள சாதனைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்:
டி20 கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் சாதனை:
ரோஹித் ஷர்மா இதுவரை 55 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தி உள்ளார். இதில் இந்திய அணி 43 ஆட்டங்களில் வெற்றியும், 12 ஆட்டங்களில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதன் மூலம் ரோஹித் சர்மா கேப்டனாக 78.18 சதவீத போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை நாம் அறியமுடியும்.
சர்வதேச டி20 போட்டிகளை போலவே ஐபிஎல் போட்டிகளிலும் சிறந்த கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டு இருக்கிறார். அதாவது ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார். ரோஹித் ஷர்மாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் இந்த அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடும்..
டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்தைத் தொடர்ந்து பாகிஸ்தானை எதிர்கொள்ள ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தயாராக உள்ளது. ஜூன் 9ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இரு அணிகள் மோதும் போட்டி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
அயர்லாந்து, பாகிஸ்தான் தவிர, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இந்தியாவின் குழுவில் இடம் பெற்றுள்ளன. எனவே, இந்த அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடும். இருப்பினும், இந்திய அணி தனது முதல் மூன்று போட்டிகளை நியூயார்க்கில் உள்ள நாசாவ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடவுள்ளது.
இதன் பிறகு அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதேசமயம் இந்தப் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:T20 World Cup: மீண்டும் மீண்டுமா! பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்றுக்கு ஆப்புவைக்க காத்திருக்கும் இந்தியா!
மேலும் படிக்க: T20 World Cup USA vs PAK: பாகிஸ்தானை வீழ்த்திய எப்படி? அமெரிக்க கேப்டன் மோனங்க் படேல் சொன்னது இதுதான்!