Rohit Sharma: ’ரசிகர்களின் அன்புக்கு நன்றி; இனி நடக்கப்போவது இதுதான்’ - மனம் திறந்து பேசிய ரோகித் சர்மா!
Rohit Sharma: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ரோகித் மற்றும் விராட்டின் ஓய்வு குறித்து அவர்களே முடிவு எடுக்க அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் இறுதில் போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது. இறுதிப் போட்டி வரை தோல்வியே சந்திக்காமல் இருந்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் தோல்வியைச் சந்தித்து தனது மூன்றாவது உலகக் கோப்பையை பறிகொடுத்தது. இந்த தோல்விக்குப் பின்னர் அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ரோகித் மற்றும் விராட்டின் ஓய்வு குறித்து அவர்களே முடிவு எடுக்க அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உலகக் கோப்பை தோல்விக்குப் பின்னர் ரசிகர்களுக்குக்காக கிட்டத்தட்ட 22 நாட்களுக்குப் பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியைச் சந்தித்த பின்னர் ஏற்பட்ட மன வேதனையை எவ்வாறு சமாளிப்பது என்று தனக்குத் தெரியவில்லை. இறுதிப் போட்டிவரை தோல்வியைச் சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, இறுதிப் போட்டியிலில் தோல்வியைச் சந்தித்ததால் ஏற்பட்ட மனவலியைப் போக்க எங்காவது செல்ல வேண்டும் என தோன்றியது.
முதல் சில நாட்களில் இதிலிருந்து எப்படி மீள்வது என்று எனக்குத் தெரியவில்லை. என் குடும்பத்தினரும் என் நண்பர்களும் நான் தோல்வியில் இருந்து வெளியில் வர வேண்டும் என்பதற்காக என்னைச் சுற்றி நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் அழகாக வைத்திருந்தார்கள். அது மிகவும் உதவியாக இருந்தது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியைச் சந்திப்பதை ஜீரணிப்பது எளிதானது அல்ல. ஆனால், வாழ்க்கை நகர்கிறது. நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அதுவும் குறிப்பாக வாழ்க்கையை நேர்மையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் தோல்வி கொடுத்த மனவலியில் இருந்து வெளியே வந்தே ஆகவேண்டும்.
ஆனால் ஒரு அணியாக நாங்கள் இத்தனை வருடங்களாக உலகக் கோப்பைக்காக உழைத்தோம். உலகக் கோப்பையை எட்டமுடியாமல் போனதுதான் ஏமாற்றமளிக்கிறது. நீண்ட காலமாக எட்டவேண்டும் என இருந்த கனவினை அதன் அருகில் சென்று கனவினை எட்டமுடியவில்லை என்றால் ஏற்படும் ஏமாற்றம் பெரும் விரக்தியைக் கொடுக்கும். இறுதிப் போட்டியில் நாங்கள் செய்த தவறு என்று எனக் கேட்டால், நாங்கள் ஒரு அணியாக நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். நாம் ஒரு அணியாக ஒரு போட்டிக்காக திட்டங்கள் வைத்திருந்தாலும், சில நேரங்கள் விளையாட்டு நமது திட்டப்படி போகாது.
அதேநேரத்தில் நமது இந்திய அணியை நினைத்தால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், ஏனென்றால் உலகக் கோப்பையில் நாங்கள் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் இப்படிச் செயல்பட முடியாது.
View this post on Instagram
அந்த இறுதிப் போட்டிக்குப் பிறகு அணி விளையாடுய விதம் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் கொடுத்திருக்கும். நான் தோல்வியில் இருந்து வெளியேற எங்கு சென்றாலும் ரசிகர்கள் அங்கேயும் வந்து இந்திய அணியை பாராட்டினர்.
உலகக் கோப்பை நடைபெற்ற ஒன்றரை மாதங்களில் ரசிகர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவை நான் பாராட்ட விரும்புகிறேன். அதேநேரத்தில் தோல்வியையே நினைத்துக் கொண்டு இருந்தால் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் எனது கவனம் திருமபாது. இந்த நெருக்கடி காலத்தில் நான் சந்தித்த மக்களிடமிருந்து தூய்மையான அன்பு மட்டுமே இருந்தது. அதைப் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. இது நான் திரும்பிச் சென்று மீண்டும் வேலை செய்யத் தொடங்கவும், மற்றொரு இறுதிப் பரிசைத் தேடவும் உந்துதலைத் தருகிறது” என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.