Rohit Sharma: 151.2 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட பந்து! அலேக்காக சிக்ஸர் பறக்கவிட்ட ஹிட்மேன் ரோகித் சர்மா!
Rohit Sharma: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று அதாவது மார்ச் மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியின் சுழற்பந்து தாக்குதலால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சிக்ஸருக்கு பறந்த 151.2 கி.மீட்டர் வேகப்பந்து:
இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் இன்னிங்ஸை வழக்கம்போல் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் தொடங்கினர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் இந்திய அணியின் ஸ்கோர் 44 ரன்களாக இருந்த போது ரோகித் சர்மா ஒரு சிக்ஸர் விளாசி இருந்தார்.
இந்த சிக்ஸரை இங்கிலாந்து அணியின் ஆஸ்தான பந்து வீச்சாளர்களில் ஒருவரான மார்க் வுட் பந்தில் பறக்கவிட்டிருந்தார். போட்டியின் நான்காவது ஓவரினை மார்க் வுட் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தினை மார்க் வுட் 151.2 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். ஷார்ட் பாலாக வீசப்பட்ட பந்தை ரோகித் சர்மா தனக்கே உரிதான ஸ்டைலில் சிக்ஸர் விளாசி அமர்க்களப்படுத்தியுள்ளார்.
Mark Wood says "Hi" with 151.2 kmph and Rohit replied "Good Bye" with a pull shot for a six. 👌🫡pic.twitter.com/zITxigP7vh
— Johns. (@CricCrazyJohns) March 7, 2024
இந்த சிக்ஸர் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து அணியின் போர்ஸ்டோவ் ஆகியோருக்கு 100வது டெஸ்ட் போட்டி ஆகும். இங்கிலாந்து அணி தனது முதல் விக்கெட்டினை 64 ரன்களில் இருந்த போது இழந்தது. முதல் விக்கெட்டினை கைப்பற்றிய குல்தீப் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் தொடங்கி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார்.
இங்கிலாந்து அணிக்கு எதாவது ஒரு ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோது எல்லாம் குல்தீப் அணிக்கு விக்கெட்டுகளை அள்ளிக்கொடுத்துக் கொண்டே இருந்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜாக் கார்வ்லி மட்டும் அரைசம் விளாசி இருந்தார். அவர் 108 பந்துகளில் 11 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 79 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணியின் ஜாக் கார்வ்லி, பென் டக்கட், ஒல்லி போப், பேரிஸ்டோவ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார். இதில் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா ரூட்டின் விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார். 100வது போட்டியில் களமிறங்கிய அஸ்வினுக்காகவே காத்திருந்து களமிறங்கினர் இங்கிலாந்து அணியின் டைல் எண்டர்ஸ். இங்கிலாந்து அணியின் பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது விக்கெட்டினை அஸ்வின் கைப்பற்றி அசத்தினார்.