Rishabh Pant: இந்திய அணியுடன் பயிற்சி மேற்கொண்ட ரிஷப் பண்ட்! மீண்டும் வருகிறான் இளைய நாயகன்?
இந்திய அணியில் இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் என பலரை முயற்சித்தும் ரிஷப் பண்ட் இடத்தை இன்னும் யாராலும் பூர்த்தி செய்ய முடியவில்லை.
வருகின்ற ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை போட்டியானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு இப்போதே பல அணிகள் தயாராகிவருகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை எந்த 11 பேர் விளையாட போகிறார்கள் என்பது இன்னும் பெரிய கேள்விகுறியாகவே உள்ளது.
எப்போது வருவார் ரிஷப் பண்ட்?
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடமும் ஊசலாடி வருகிறது. இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் என பலரை முயற்சித்தும் ரிஷப் பண்ட் இடத்தை இன்னும் யாராலும் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதையடுத்து, ரிஷப் பண்ட் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றன.
ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்று கேள்வி உலா வரும் நிலையில், இந்திய அணியுடன் ரிஷப் பண்ட் நேற்று பயிற்சி மேற்கொண்டார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கு தயாராகும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு சென்றடைந்தது. நேற்று, சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்திய அணி வீரர்களுடன் காணப்பட்டார்.
இந்திய அணியுடன் ரிஷப் பண்ட் :
விராட் கோலி, ரிங்கு கிங்குடன் ரிஷப் பண்ட் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரிஷப் பண்ட் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அப்போது, சக இந்திய வீரர்களை சந்திக்க வந்திருந்தார்.
Virat Kohli and Rishabh pant at Chinnaswamy Stadium 😍🔥 pic.twitter.com/VnjwvBOnTo
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) January 16, 2024
ரிஷப் பண்ட் கடைசியாக எப்போது விளையாடினார்..?
கடந்த 2022 ம் ஆண்டு டிசம்பரில் நடந்த கார் விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அதன்பிறகு, எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. 2022 டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் சென்றது. இந்த தொடரிலேயே ரிஷப் பண்ட் கடைசியாக விளையாடினார். வங்கதேச சுற்றுப்பயணத்திற்கு பிறகு, டிசம்பர் 30ம் தேதி அன்று காலை, பண்ட் வேகமாக ஓட்டிவந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ரிஷப் பண்ட்டின் முழங்கால் மற்றும் கணுக்கால் தசைநார் கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்தார்.
Rishabh Pant in practice session at nets in Chinnaswamy stadium.
— CricketMAN2 (@ImTanujSingh) January 16, 2024
Can't wait to see him on the field - Comeback soon, Champion! pic.twitter.com/RqF8Ab6cYI
ஐபிஎல் 2024ல் திரும்புகிறாரா?
வருகின்ற மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் 2024 மூலம் மீண்டும் ரிஷப் பண்ட் கிரிக்கெட்டில் களம் மிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி களமிறங்கினால் ஐபிஎல் 2024 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் அவரை பார்க்கலாம். வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக அவர் மீண்டும் உடற்தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா அணிக்காக ரிஷப் பண்ட் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதன்படி, இந்தியாவுக்காக 33 டெஸ்ட் போட்டிகளில் 2271 ரன்களும், 30 ஒருநாள் போட்டிகளில் 865 ரன்களும், 66 டி20 போட்டிகளில் விளையாடி 987 ரன்களும் எடுத்துள்ளார்.