மேலும் அறிய

48 மணி நேரம் கெடு விதித்த பிசிசிஐ... கடைசி வரை சம்மதிக்காத விராட் கோலி! நடந்தது என்ன?

அணி தொடர் தோல்விகளை சந்தித்திருந்தால் கேப்டனை மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றாலும் எந்தவித காரணங்களும் இல்லாமல் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

நியூஸிலாந்து டெஸ்ட் தொடரை 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்று கொடுத்ததற்கு பரிசாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கி புதிய கேப்டனாக ரோகித் ஷர்மாவை நியமித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக உருவெடுத்திருக்கும் கோலிக்கு இப்படி ஒரு நிலை நேர்ந்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அணி தொடர் தோல்விகளை சந்தித்திருந்தால் கேப்டனை மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றாலும் எந்தவித காரணங்களும் இல்லாமல் விராட் கோலியை ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவார் என்று கூறப்பட்டது. அதைப்போலவே தொடரின் இறுதியில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. பணிச்சுமையை புரிந்து கொள்வது மிக முக்கியமானது. கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக ஒரு வீரராகவும், 5-6 ஆண்டுகளக தொடர்ந்து கேப்டனாகவும் பணியாற்றியது உள்ளிட்ட எனது அதிகப்படியான பணிச்சுமையை கருத்தில் கொண்டும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காகவும் இந்த முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறியிருந்தார் விராட் கோலி. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அவரை கேப்டன் பதவியில் இருந்து சத்தமே இல்லாமல் நீக்கியிருக்கிறது பிசிசிஐ. ரோகித் ஷர்மாவை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கேப்டனாக நியமிப்பதாக தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியின் 18 வீரர்களை அறிவித்ததன் கீழே ஒற்றை வரியில் முடித்திருக்கிறது பிசிசிஐ.

48 மணி நேரம் கெடு விதித்த பிசிசிஐ... கடைசி வரை சம்மதிக்காத விராட் கோலி! நடந்தது என்ன?

இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி விட்டுச்சென்ற அந்த இடத்தை நிரப்பிய ஒரு சரியான ஆள் கோலி தான். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி 2013ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அப்போது முதல் 8 ஆண்டுகள் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்து வந்தார். இந்திய ஒருநாள் அணியின்  கேப்டனாக விராட் கோலி 95 போட்டிகளில் செயல்பட்டுள்ளார். அதில் 65 போட்டிகளில் வெற்றியும், 27 தோல்வியும் பெற்றுகொடுத்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பான சதவிகிதம் வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் இவர் நான்காவது இடத்தில் உள்ளார். அப்படியிருந்தும் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சமூகவலைதளங்களில் கடுமையாக எதிர்ப்பு எழுந்தவுடன் மவுனம் கலைத்தது பிசிசிஐ. கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டது குறித்து விளக்கமளித்த சவுரவ் கங்குலி, டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று கோலியிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டது. ஆனால் விராட் கோலி அதை ஏற்க மறுத்துவிட்டார். ஆகவே தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு இரண்டு கேப்டன் இருக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்தனர். அதனால் தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித்தையும், டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலியையும் கேப்டனாக அறிவிக்க தேர்வுக்குழு முடிவு எடுத்தது. அதன்பின்னர் இந்த முடிவை நானும் தேர்வுக்குழு தலைவர் சேதன் சர்மாவும் விராட் கோலியிடம் பேசினோம். அவர் நாங்கள் கூறியதை ஏற்று கொண்டார். அதன்பின்னர் தான் இந்த அறிவிப்பு வெளியானது. விராட் கோலியிடம் இந்த முடிவு குறித்து தெரிவித்த பிறகே புதிய கேப்டன் அறிவிப்பு வெளியானது என்று கூறியுள்ளார்.

48 மணி நேரம் கெடு விதித்த பிசிசிஐ... கடைசி வரை சம்மதிக்காத விராட் கோலி! நடந்தது என்ன?

ஆனால், முன்பு வெளியான தகவல்கள் வேறுவிதமானவை. டி20 உலகக்கோப்பையின் போது லீக் சுற்றோடு இந்தியா வெளியேறியபோதே கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகம் எதிர்பார்த்தது. அதைப்போலவே விராட் கோலியும் விலகினார். 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்த ஆர்வமாக இருந்த விராட் கோலியை அவருக்கு விருப்பம் இல்லாமலேயே நீக்கியிருக்கிறது பிசிசிஐ என்று கூறப்படுகிறது. ஒருநாள் போட்டி கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக தானாக முன்வந்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விராட் கோலிக்கு 48 மணிநேரம் கெடு விதித்ததாகவும், ஆனால் விராட் கோலி அதை ஏற்காததால், 49வது மணி நேரம் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு, அவர் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து ஒரு ட்ராஃபியையும் இந்திய அணிக்கு பெற்றுத்தரவில்லை என்ற காரணமும் பின்னணியில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஐபிஎல் கேப்டனாகவும் பல ஆண்டுகளாக இருந்துவரும் விராட் கோலி ஐபிஎல் கோப்பையையும் இதுவரை வென்றதில்லை என்ற ஒரு குறை அவர்பக்கம் இருக்கிறது. ஆனால், ரோகித் ஷர்மா தலைமையிலான அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. அணியை வழிநடத்துவதிலும் ரோகித் ஷர்மா சிறந்தவர் அதனால் அவரை ஒரு நாள் போட்டியிலும் கேப்டனாக நியமிப்பது பொருத்தமாக இருக்கும் என்று தேர்வுக்குழு தரப்பிலும், நிர்வாகிகள் தரப்பிலும் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. விராட் கோலி அணியில் மாற்றங்களை செய்துகொண்டே இருப்பார். ஆனால் ரோகித்சர்மா நிறைய வாய்ப்புகளை கொடுப்பார். அவர் அணியில் பெரிதாக மாற்றம் இருக்காது. புதிய வீரர்களை உருவாக்குவதிலும் ரோகித்சர்மா தேர்ந்தவர். அப்படி மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து உருவானவர்கள் தான் பும்ராவும், ஹர்திக் பாண்ட்யாவும். ஆனால் கோலி அதெற்கெல்லாம் இடம் கொடுப்பதில்லை. அதோடு, விராட் கோலி களத்தில் அக்ரெசிவாக இருப்பவர். ஆனால் ரோகித்ஷர்மா அமைதியானவர். வீரர்களிடம் அதிகம் கலந்தாலோசித்து வியூகங்களை செயல்படுத்துவதில் விராட்கோலியை விட ரோகித்ஷர்மா தேர்ந்தவர் அதனால் தான் ரோகித்திடம் ஒயிட் பால் கிரிக்கெட்டின் முழு பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது என்று கூறுகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.

48 மணி நேரம் கெடு விதித்த பிசிசிஐ... கடைசி வரை சம்மதிக்காத விராட் கோலி! நடந்தது என்ன?

அதோடு, முகமது ஷமி மீது இணையத்தில் தனிமனித தாக்குதல் நடந்தபோது அவருக்கு ஆதரவாக பேசிய ஒரே ஆள் விராட் கோலிதான். இந்திய அணியில் விளையாடிவரும் மற்ற எந்த வீரர்களும் அதுகுறித்து வாய்திறக்கவே இல்லை. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று விராட் கோலி கேட்டுக்கொண்டிருந்தார். இதுபோன்ற செயல்களும் சிலரை கடுப்பேற்றியிருக்கிறது இந்த நடவடிக்கைக்கு அதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இது போன்று நடந்திருப்பது விராட்கோலிக்கு மட்டும் அல்ல. கிரிக்கெட்டின் கடவுள் என்று கூறப்படும் சச்சினுக்கும் நடந்திருக்கிறது. பிசிசிஐயில் இருந்து யாரும் என்னை அழைக்கவும் இல்லை, என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது குறித்து தெரிவிக்கவும் இல்லை. மீடியாவில் இருந்து ஒருவர் என்னை அழைத்து கேட்கும் வரை இந்த விஷயமே எனக்குத் தெரியாது. இதை கேட்டபோது அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன் என்று அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது கொந்தளித்திருந்தார் சச்சின். தோனியும் எந்த வித பிரிவு உபசாரங்களும் இல்லாமலேயே தான் ஓய்வு முடிவை அறிவித்தார். இப்போது கோலிக்கு இப்படி நடந்திருக்கிறது. ரோகித் ஷர்மாவுக்கு இப்படி நடக்கக் கூடாது என்று வேண்டிக்கொள்வோமாக.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
Embed widget