Ravindra Jadeja on Retirement: ’எனக்கா எண்ட் கார்டு போட்டிங்க?’ - டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வுக்கு ஜடேஜாவின் நச் பதில்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகும் எண்ணம் ஜடேஜாவுக்கு இல்லை என்பதும், பொய் செய்திகளை நம்ப வேண்டாம் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ஜடேஜா
இந்திய கிரிக்கெட் அணி ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் பரவின. சமூக வலைதளத்திலும் இந்த செய்தி டிரெண்டானது. இந்நிலையில், ’இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய’ என கேப்ஷனிட்டு டெஸ்ட் கிரிக்கெட் ஜெர்ஸியில் இருப்பது போன்ற புகைப்படத்தை ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இது இப்போது வைரலாகி வருகின்றது.
Long way to go💪🏻💪🏻 pic.twitter.com/tE9EdFI7oh
— Ravindrasinh jadeja (@imjadeja) December 15, 2021
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ஜடேஜா பங்கேற்கவில்லை. அடுத்து, தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் டி20 தொடரிலும் விளையாட உள்ளது. டி20 தொடர் விளையாடுவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா தேர்ந்தெடுக்கப்படவில்லை.
முழு உடல் தகுதி பெறாததால், ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், அக்சர் படேல் ஆகியோருடன் ஜடேஜாவும் இந்த டெஸ்ட் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால், ஜடேஜாவின் டெஸ்ட் கரியர் முடிவுக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகின.
— Ravindrasinh jadeja (@imjadeja) December 15, 2021
இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜா இரண்டு புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். முதல் புகைப்படத்தில், ”போலி நண்பர்கள் பொய்களை நம்புவார்கள், உண்மையான நண்பர்கள் எப்போதும் உன்னை நம்புவார்கள்” என பதிவிட்டிருந்தார். அதை தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட் ஜெர்ஸியில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்த அவர், ’இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய’ என கேப்ஷனிட்டு பகிர்ந்திருந்தார்.
இதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகும் எண்ணம் ஜடேஜாவுக்கு இல்லை என்பதும், பொய் செய்திகளை நம்ப வேண்டாம் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார் அவர். 33 வயதான ஜடேஜா, இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 2195 ரன்கள் குவித்திருக்கிறார், 232 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
மேலும் படிக்க: 13 ஆண்டுகள்..சச்சின், யுவராஜ், தோனி படை சென்னையில் செய்த சம்பவம்..
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்