மேலும் அறிய
Advertisement
Ranji Trophy: இதுவரை 88 சீசன்கள்! 41 முறை மும்பை சாம்பியன்.. ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள், விக்கெட்கள் லிஸ்ட் இதோ!
இதுவரை 88 சீசன்கள் ரஞ்சி டிராபி விளையாடப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக 41 முறை மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியாக பார்க்கப்படும் ரஞ்சி டிராபியானது இன்று (ஜனவரி 5) தொடங்கி மார்ச் 14 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்று 137 போட்டிகளில் விளையாடுகிறது. முன்னாள் சாம்பியன்களான மத்திய பிரதேசம், விதர்பா, சவுராஷ்டிரா, மும்பை, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 88 சீசன்கள் ரஞ்சி டிராபி விளையாடப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக 41 முறை மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்தநிலையில், இதுவரை ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள், அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள், அதிகபட்ச ஸ்கோர் என அனைத்தையும் இங்கே பார்க்கலாம்.
ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:
பேட்ஸ்மேன்கள் | மொத்த ரன்கள் | அணிகள் |
வாசிம் ஜாஃபர் | 12038 | மும்பை, விதர்பா |
அமோல் முசும்தார் | 9202 | மும்பை, அசாம், ஆந்திரா |
தேவேந்திரசிங் பண்டேலா | 9201 | மத்திய பிரதேசம் |
பராஸ் டோக்ரா | 8872 | இமாச்சல பிரதேசம், புதுச்சேரி |
யஷ்பால் சிங் | 8700 | சர்வீசஸ், திரிபுரா, மணிப்பூர், சிக்கிம் |
மிதுன் மன்ஹாஸ் | 8554 | டெல்லி, ஜம்மு காஷ்மீர் |
ஃபைஸ் யாகூப் ஃபசல் | 8374 | விதர்பா, ரயில்வே |
மனோஜ் திவாரி | 8348 | வங்காளம் |
ஹிருஷிகேஷ் கனிட்கர் | 8059 | மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் |
நமன் ஓஜா | 7861 | மத்திய பிரதேசம் |
ரஞ்சி டிராபில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:
பந்துவீச்சாளர்கள் | விக்கெட்டுகள் | அணிகள் |
ராஜீந்தர் கோயல் | 637 | பாட்டியாலா, தெற்கு பஞ்சாப், டெல்லி, பஞ்சாப் |
எஸ் வெங்கடராகவன் | 531 | தமிழ்நாடு |
சுனில் ஜோஷி | 479 | கர்நாடகா |
வினய் குமார் | 442 | கர்நாடகா, பாண்டிச்சேரி |
நரேந்தர் ஹிர்வானி | 441 | மத்திய பிரதேசம், வங்காளம் |
பி சந்திரசேகர் | 437 | கர்நாடகா |
வாமன் குமார் | 418 | தமிழ்நாடு |
பங்கஜ் சிங் | 409 | ராஜஸ்தான், புதுச்சேரி |
சாய்ராஜ் வசந்த் பஹுதுலே | 405 | மும்பை, மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், விதர்பா |
பிஷன் சிங் பேடி | 403 | வடக்கு பஞ்சாப், டெல்லி |
இதுவரை முறியடிக்கபடாத சாதனைகள்..
- அதிக முறை சாம்பியன் - மும்பை (41 முறை)
- ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் - 1993/94ல் ஆந்திராவுக்கு எதிராக ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 944 ரன்கள் குவித்தது.
- ஒரு இன்னிங்ஸில் குறைந்தபட்ச ஸ்கோர் - 2010/11ல் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி 21 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
- மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி - கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 725 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.
- அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் -1948/49ல் சௌராஷ்டிராவுக்கு எதிராக மகாராஷ்டிரா வீரர் பிபி நிம்பல்கர் 443 ரன்கள் எடுத்ததே இதுவரை அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது.
- அதிக சதங்கள்- மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்காக விளையாடி வாசிம் ஜாபர் இதுவரை 40 சதங்கள் அடித்துள்ளார்.
- rஅதிகபட்ச பேட்டிங் சராசரி: மும்பை அணிக்காக விளையாடிய விஜய் மெர்ச்சண்ட் 98.35 சராசரியை வைத்துள்ளார்.
- ஒரு சீசனில் அதிக ரன்கள்: 1999/2000 சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய விவிஎஸ் லஷ்மண் 1415 ரன்கள் எடுத்ததுதான் இதுவரை ஒரு சீசனில் அடிக்கப்பட்ட ரன்களின் எண்ணிக்கை.
- சிறந்த பந்துவீச்சு (இன்னிங்ஸ்): 1956/57 சீசனில் அஸ்ஸாம் அணிக்கு எதிராக பெங்கால் வீரர் பிரேமாங்சு சாட்டர்ஜி ஒரு இன்னிங்ஸில் வெறும் 20 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 10 விக்கெட்களை அள்ளினார்.
- ஒரு சீசனில் அதிக விக்கெட்கள் - 2018/19 சீசனில் பீகார் அணிக்காக விளையாடிய அசுதோஷ் அமான் 68 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
- அதிகபட்ச பார்ட்னர்ஷிப் - 2016/17 சீசனில் டெல்லி அணிக்கு எதிராக மகாராஷ்டிரா வீரர்களான ஸ்வப்னில் குகலே மற்றும் அங்கித் பாவ்னே 3வது விக்கெட்டுக்கு 594 ரன்களை குவித்தனர்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion