Watch Video : ரஞ்சி போட்டியில் உடைந்த கையால் புரட்டியெடுத்த விஹாரி.. கட்டுடன் கெத்துக்காட்டிய மொமண்ட்..!
கட்டுப்போட்டு உடைந்த இடது மணிக்கட்டுடன் ஹனுமன் விஹாரி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு கையால் மட்டும் ஷாட்களை ஆடினார்.
ஆந்திர பிரதேசம் மற்றும் நடப்பு சாம்பியனான மத்திய பிரதேச அணிகளுக்கிடையேயான 4வது காலிறுதி போட்டி இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆந்திரா அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்கள் குவித்தது. அடுத்ததாக முதல் இன்னிங்ஸை தொடங்கிய மத்திய பிரதேசம் 228 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
Do it for the team. Do it for the bunch.
— Hanuma vihari (@Hanumavihari) February 1, 2023
Never give up!!
Thank you everyone for your wishes. Means a lot!! pic.twitter.com/sFPbHxKpnZ
தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆந்திர அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாற தொடங்கியது. விஹாரி முன்னதாக பேட்டிங் செய்தபோது மத்தியப் பிரதேச வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானின் விரைவான பவுன்சரைத் தடுக்க முயன்றபோது அவரது கையில் காயம் ஏற்பட்டது.
WARRIOR VIHARI!
— Saiyami Kher (@SaiyamiKher) February 1, 2023
Broke his wrist and batted left handed with 1 hand! What a true fighter!@Hanumavihari showed the same spirit in Australia and now at the Ranji game. Incredible. #HanumaVihari pic.twitter.com/hMQailJYFi
இந்தநிலையில்தான், ஆந்திர அணி ஒரு கட்டத்தில் 76/9 என்ற நிலையில் தத்தளித்தனர். இதையடுத்து, கட்டுப்போட்டு உடைந்த இடது மணிக்கட்டுடன் ஹனுமன் விஹாரி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு கையால் மட்டும் ஷாட்களை ஆடினார். இதன் போது, வலது கை பேட்டர் 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் உதவியுடன் 15 ரன்கள் எடுத்தார். இருப்பினும் சரண்ஷ் ஜெயின் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார்.
WHAT IS GOING ON pic.twitter.com/hmoQjZfjAn
— TwentyTwo Yards (@twentytwo_yards) February 2, 2023
ஆந்திராவின் 11 பேட்டர்களில் நான்கு பேர் மட்டுமே இரட்டை எண்ணிக்கையில் அடித்தனர், ஆச்சரியப்படும் விதமாக அவர்களில் ஹனுமா விஹாரியும் ஒருவர்.
ரஞ்சி டிராபி 2022-23 காலிறுதி: ஆந்திராவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மத்தியப் பிரதேசம்
முதல் இன்னிங்ஸில், ரிக்கி புய் மற்றும் கரண் ஷிண்டே ஆகியோரின் சதங்களால் ஆந்திர பிரதேசம் 379 ரன்களை எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய மத்தியப் பிரதேசம் 228/10 ரன்களை எடுத்தது. தொடர்ந்து, 2வது இன்னிங்ஸில் ஆந்திரப் பிரதேசத்தை வெறும் 93 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தது. அவேஷ் கான் அற்புதமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெற்றிக்கு 245 ரன்களை துரத்திய மத்தியப் பிரதேசம் 77 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.