Ranji Trophy 2023-24 Semi-Finals: விதர்பா vs மத்திய பிரதேசம் & மும்பை vs தமிழ்நாடு! எங்கு? எப்படி பார்க்கலாம்?
அரையிறுதிப் போட்டிகளில் விதர்பா vs மத்தியப் பிரதேசம் மற்றும் மும்பை vs தமிழ்நாடு ஆகியவை அணிகள் மோத உள்ளன.
ரஞ்சி டிராபி அரையிறுதி:
ரஞ்சி டிராபி 2023-24 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நான்கு முன்னாள் சாம்பியன்கள் இறுதிப் போட்டியில் இடம்பிடிக்கப் போட்டியிடுகின்றனர். அரையிறுதிப் போட்டிகளில் விதர்பா vs மத்தியப் பிரதேசம் மற்றும் மும்பை vs தமிழ்நாடு ஆகியவை அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் நாக்பூர் மற்றும் மும்பையில் உள்ள இரண்டு மைதானங்களில் மார்ச் 2 ஆம் தேதி ஆம் தேதி தொடங்க உள்ளது. முன்னதாக இந்த தொடரில் இரண்டு முறை சாம்பியனான விதர்பா அணி நாக்பூரில் நடந்த காலிறுதி போட்டியில் கர்நாடகாவை 127 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதேபோல், முன்னாள் சாம்பியனான மும்பை அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்று 5 முறை வென்ற பரோடாவை கால் இறுதி 2 இல் வீழ்த்தியது.
அதேபோல்,கோயம்புத்தூரில் நடந்த காலிறுதி 3ல், இரண்டு முறை சாம்பியனான சவுராஷ்டிராவை இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வென்றது. காலிறுதி 4-ல் 2022 சாம்பியனான மத்தியப் பிரதேசம் அணி இந்தூரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆந்திராவை வீழ்த்தியது.
விதர்பா vs மத்தியப் பிரதேசம், 1வது அரையிறுதி மற்றும் மும்பை vs தமிழ்நாடு, 2வது அரையிறுதி எங்கே நடக்கும்?
விதர்பா vs மத்தியப் பிரதேசம், முதல் அரையிறுதி மற்றும் மும்பை vs தமிழ்நாடு, 2-வது அரையிறுதி முறையே நாக்பூரில் உள்ள VCA ஸ்டேடியத்திலும், மும்பையில் உள்ள ஷரத் பவார் கிரிக்கெட் அகாடமி BKC யிலும் நடைபெறும்.
விதர்பா vs மத்தியப் பிரதேசம், 2வது அரையிறுதி மற்றும் மும்பை vs தமிழ்நாடு, 2வது அரையிறுதி எந்த நேரத்தில் தொடங்கும்?
2023-24 ரஞ்சி டிராபியின் இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் இந்திய நேரப்படி காலை 09:30 மணிக்கு தொடங்கும்.
எந்த சேனல் விதர்பா vs மத்திய பிரதேசம், 1வது அரையிறுதி மற்றும் மும்பை vs தமிழ்நாடு, 2வது அரையிறுதியை நேரடியாக ஒளிபரப்பும்?
அரையிறுதிப் போட்டிகள் நேரடியாக எந்த தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகாது. அதேநேரம் ஜியோ சினிமாவில் இந்த போட்டிகளை காணலாம்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!