Ranji Trophy 2022 Final: ரஞ்சி கோப்பை - வரலாறு படைத்த மும்பையை ஓடவிட்ட மத்தியப் பிரதேசம்!
பெங்களூருவில் ஹெவிவெயிட் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மத்தியப் பிரதேசம் முதல் ரஞ்சி கோப்பை பட்டத்தை வென்றது.
பெங்களூருவில் நடைபெற்ற இறுதிபோட்டியில் ஹெவிவெயிட் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மத்தியப் பிரதேசம் முதல் ரஞ்சி கோப்பை பட்டத்தை வென்றது.
1934ம் ஆண்டு முதல் நடந்து வரும் ரஞ்சிக்கோப்பைத் தொடர் ஆங்கிலேய இந்தியாவிலிருந்து நடந்து வருகிறது. இத்தொடரில் இதுவரை மும்பை அணி மட்டும் 41 முறை பட்டம் வென்று அதகளப்படுத்தியுள்ளது. மும்பை அணி மிகப்பெரிய சாதனையை தன் வசம் வைத்துள்ளது. அதிலும், தொடர்ச்சியாக 15 ஆண்டுகள், ரஞிக்கோப்பையை வென்ற ஒரே அணி மும்பை மட்டும் தான். அதாவது 1958 முதல் 1973 வரை தொடர்ச்சியாக கோப்பையை கைப்பற்றி, அந்தச் சாதனையை படைத்ததிருக்கிறது.
இவ்வளவு பலம் வாய்ந்த மற்றும் ரஞ்சிக் கோப்பையில் வரலாறு படைத்துள்ள மும்பை அணியை இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேசம் அணி வீழ்த்தி ரஞ்சிக் கோப்பையை முதல் முறையாக வென்றுள்ளது.
ரஞ்சிக் கோப்பை என்றாலே மும்பை தான் என்று இருக்கும் பட்சத்தில், இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத மத்திய பிரதேச அணி இறுதிப் போட்டியில் எதிர்கொண்டது. முதல் இன்னிங்ஸில் முதலில் ஆடிய மும்பை அணியில் சர்ப்ரஸ் கான் 134 ரன்கள் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் மும்பை அணி மொத்தம் 374 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து ஆடிய மத்தியப் பிரதேச அணியில் யாஷ் துபே 133 ரன்களும், ஷிபம் ஷர்மா 116 ரன்களும், ராஜத் படிதர் 122 ரன்களும் அடித்து அணியை 536 ரன்கள் எடுக்க உதவினர்.
Madhya Pradesh clinch maiden Ranji Trophy title with six-wicket win over heavyweights Mumbai in Bengaluru
— Press Trust of India (@PTI_News) June 26, 2022
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணி 269 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து ஆடிய மத்திய பிரதேச அணி தொடக்கத்தில் நான்கு விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. அதன் பிறகு ராஜத் படிதர் 30 ரன்கள் அடித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றரார். இறுதியாக 108 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்து முதல் முறையாக ரஞ்சிக் கோப்பை வென்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்