Hanuman Vihari: "அவர்தான் கேப்டனாக வேண்டும்" விஹாரிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆந்திர கிரிக்கெட் வீரர்கள்!
ஹனுமன் விஹாரியே தங்களுக்கு கேப்டனாக தொடர வேண்டும் என்று ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடிய ஆந்திர கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர் ஹனுமன் விஹாரி. இவர் ரஞ்சி கிரிக்கெட்டில் ஆந்திர அணியின் கேப்டனாக ஆடியவர். இந்த நிலையில், அவர் ஆந்திர கிரிக்கெட் சங்கம் ஒரு 17 வயது சிறுவனின் பேச்சை கேட்டு தன்னை மிகவும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதாக மிகவும் மன வேதனையுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
விஹாரிக்கு ஆதரவாக கடிதம்:
அவரது பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரஞ்சி கிரிக்கெட் தொடரில் ஆந்திர அணிக்காக ஆடிய வீரர்கள் அனைவரும் தங்களது கேப்டனாக மீண்டும் ஹனுமன் விஹாரியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, “ இந்த கடிதம் ஹனுமான் விஹாரி விவகாரம் தொடர்பானது. ரஞ்சி தொடரில் இடம்பெற்ற வீரர் ஒருவர் விகாரிக்கு எதிராக அவதூறாகவும், கோபமாகவும் பேசியதாக புகார் அளித்துள்ளார். உண்மை என்னவென்றால், அந்த வீரரிடம் அவர் ஆக்ரோஷமாக விஹாரி அணுகவில்லை. அணி சூழலில் இது மிகவும் சாதாரணமான ஒன்றாகும். இது எப்போதும் அணியின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காகவே.
View this post on Instagram
எதிர்பாராதவிதமாக அதை அணி வீரரில் ஒருவர் தனிப்பட்டதாக எடுத்துக் கொண்டார். இதற்கு அணி வீரர்கள், உதவி பணியாளர்கள் உள்பட அனைவருமே சான்றாகும். எங்களுக்கு விஹாரியே கேப்டனாக தொடர வேண்டும். எங்களுக்கும் அவருக்கும் எந்த சிக்கலும் இல்லை. அவர் எங்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை கொண்டு வருவார். அவரது தலைமைக்கு கீழே அணி சிறப்பாக ஆடியதை பார்த்திருப்பீர்கள். அவரது தலைமையில் 7 முறை தகுதி பெற்றுள்ளோம். இந்த ரஞ்சி தொடரில் நாங்கள் தயாரான நிலையில், பெங்கால் அணிக்கு எதிராக வெற்றி பெற்றோம். ஆந்திர ரஞ்சி அணி வீரர்களாகிய எங்களை விஹாரி வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.”
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தல்:
30 வயதான ஹனுமன் விஹாரி 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம், 5 அரைசதங்கள் 839 ரன்களும், 124 முதல் தர போட்டிகளில் ஆடி 24 சதங்கள், 49 அரைசதங்கள் உள்பட 9 ஆயிரத்து 325 ரன்கள் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 97 போட்டிகளில் 5 சதங்கள், 24 அரைசதங்கள் உள்பட 3 ஆயிரத்து 506 ரன்களும், 89 டி20 போட்டிகளில் 7 அரைசதங்கள் 1707 ரன்கள் விளாசியுள்ளார்.
மேலும் படிக்க: WTC Points Table: தொடரை வென்ற இந்தியா! டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் எந்த இடம்?
மேலும் படிக்க: Rohit Sharma: இந்திய அணிக்காக இதை செய்த 6வது கேப்டன்.. ராஞ்சியில் வரலாறு படைத்த ரோஹித் சர்மா..!