Watch Video : அகிம்சையும் ஒரு அளவுக்கு தான்.. நடுரோட்டில் வாக்குவாதம் செய்த டிராவிட்! நடந்தது என்ன?
Rahul Dravid : பெங்களூருவில் ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான ராகுல் டிராவிட் செவ்வாய்க்கிழமை மாலை பெங்களூருவில் ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், அதிருப்தி அடைந்த டிராவிட் தனது தாய்மொழியான கன்னடத்தில் ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்வது தெளிவாகத் தெரிகிறது. தகவல்களின்படி, டிராவிட்டின் கார் ஒரு சரக்கு ஆட்டோவுடன் மோதியதால், அவருக்கும் டிரைவருக்கும் இடையே தெருவில் வாக்குவாதம் ஏற்பட்டது. டிராவிட் தனது காரை ஓட்டினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பெங்களூருவில் பரபரப்பான பகுதியான கன்னிங்ஹாம் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டிராவிட் இந்தியன் எக்ஸ்பிரஸ் சந்திப்பிலிருந்து ஹை கிரவுண்ட்ஸ் நோக்கி பயணித்தபோது இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருந்த ஆட்டோ பின்னால் நகரும் போதும் டிராவிட்டின் கார் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Bhuvneshwar kumar : சச்சினை டக் அவுட் செய்த 19 வயது சிறுவன்... ”தி ஸ்விங் கிங்” பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
இதனால் அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் ராகுக் டிராவிட் வாக்குவாதம் செய்தார், அந்த பிரேக்.. பிரேக் என்று கத்தியது மட்டும் கேட்டது. அதன் பின்னர்டிராவிட் சம்பவ இடத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு சரக்கு ஆட்டோ ஓட்டுநரின் தொலைபேசி எண் மற்றும் ஆட்டோவின் பதிவு எண்ணை எடுத்துக் கொண்டதாகவும் அறிக்கை கூறுகிறது.
Rahul Dravid’s Car touches a goods auto on Cunningham Road Bengaluru #RahulDravid #Bangalore pic.twitter.com/AH7eA1nc4g
— Spandan Kaniyar ಸ್ಪಂದನ್ ಕಣಿಯಾರ್ (@kaniyar_spandan) February 4, 2025
52 வயதான டிராவிட், இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நாட்டிற்காக 24,000க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்களைக் குவித்துள்ளார். டிராவிட் 2007 உலகக் கோப்பையிலும் இந்தியாவை வழிநடத்தினார்.
டிராவிட்டின் சமீபத்திய இந்திய அணி தலைமை பயிற்சியாளராக இருந்தார். இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஜூலை மாதம் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.
அதனை தொடர்ந்து, டிராவிட் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிக்குத் திரும்பி, தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அவர் ஆர்ஆருடன் ஈடுபட்டார், அங்கு ஏல வரலாற்றில் இதுவரை வாங்கப்பட்ட இளைய வீரரான 13 வயது வைபவ் சூர்யவன்ஷியை வாங்கியதன் மூலம் அந்த அணி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

