(Source: ECI/ABP News/ABP Majha)
India vs New Zealand:இந்தியா நியூசிலாந்து டெஸ்ட்; தீவிர பயிற்சியில் ரச்சின் ரவீந்திரா! பெங்களூருவில் ஒன்று கூடிய குடும்பம்!
நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தன்னுடைய பயிற்சியை தொடங்கி இருக்கிறார்.
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணியை எதிர்கொண்டது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்ற்றும் 3 டி20 போட்டிகளிலும் வென்று இந்திய அணி மொத்தமாக தொடரை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
பயிற்சியை தொடங்கிய ரச்சின் ரவீந்திரா:
இந்த போட்டிகள் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உள் நாட்டில் நடைபெறும் இந்த போட்டியில் நியூசிலாந்தை எதிர் கொள்ள தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தன்னுடைய பயிற்சியை தொடங்கி இருக்கிறார்.
ரச்சின் ரவீந்திராவின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாயார் தீபா பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் தான். அவரது தாத்தா டி. பாலகிருஷ்ண அடிகா, ஒரு பிரபலமான கல்வியாளர் மற்றும் பாட்டி பூர்ணிமா பெங்களூருவில் தான் வசிக்கிறார்.ரச்சின் ரவீந்திரா பெங்களூருவில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளதால் இவர்களது குடும்பம் தற்போது பெங்களூருவில் ஒன்று கூடி இருக்கிறது.
இதனிடையே ரச்சின் ரவீந்திரா பேசுகையில்,"டெஸ்ட் போட்டியில் விளையாடுவது வித்தியாசமானது. நீங்கள் ஐந்து நாட்கள் இங்கே இருக்கிறீர்கள், இது ஒரு பாரம்பரியம், உங்களுக்குத் தெரியும், டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சம். குடும்ப இணைப்பு காரணமாக இது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் நினைக்கிறேன். கூட்டத்தில் அவர்கள் ஒரு கூட்டமாக இருப்பார்கள், அப்பா இங்கே பார்ப்பார் என்று எனக்குத் தெரியும். எனவே அந்த தருணங்கள் நன்றாக இருக்கும்.
நான் வெலிங்டனில் பிறந்து வளர்ந்தேன், உங்களுக்குத் தெரியும், நான் எல்லா வழிகளிலும் நான் ஒரு நியூசிலாந்து வீரர். எனவே, என்னைப் பொறுத்தவரை இது ஆச்சரியமாக இருக்கிறது, மேலும் எனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் எனது குடும்பத்தினர் அதிகம் வசிக்கும் இடத்தில் விளையாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று"என்றார்