Points Table TNPL 2023: இறுதியாக 4வது இடத்தை உறுதி செய்த மதுரை.. பிளே ஆஃப்க்கு தகுதிபெற்று அசத்தல்..புள்ளி பட்டியல் நிலவரம்!
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று 5வது இடத்தை பிடித்து வெளியேறியது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2023 ந் 27வது போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், சிசெம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியானது நேற்று இரவு 7.30 மணிக்கு திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் நடைபெற்றது.
மதுரை அணிக்கு வாழ்வா? சாவா? என்ற போட்டியில் திருப்பூர் அணியை வீழ்த்தி பிளே ஆஃப்க்கு சுற்றுக்கு தகுதிபெற்றது. லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று, டிஎன்பிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்தநிலையில், 4வது அணியாக மதுரை பாந்தர்ஸ் அணியும் தகுதி பெற்றன.
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று 5வது இடத்தை பிடித்து வெளியேறியது. ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் தொடரில் ஐந்தாவது தோல்வியை புள்ளிப்பட்டியலில் சந்தித்து ஆறாவது இடத்தைப் பிடித்தனர். சேலம் அணி 4 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், பா11சி திருச்சி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறவில்லை. இன்று நெல்லை ராயல் கிங்ஸை திருச்சி அணி எதிர்கொள்கிறது. இதில், திருச்சி அணி வெற்றிபெற்றால் குறைந்தது 2 புள்ளிகளையாவது பெறும்.
TNPL 2023 புள்ளிகள் அட்டவணை
எண் |
---|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
போட்டி சுருக்கம்:
முதலில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.
மதுரை அணியில் அதிகபட்சமாக சுரேஷ் லோகேஷ்வர் (44), கேப்டன் ஹரி நிஷாந்த் (34), ஆதித்யா (37) எடுத்திருந்தனர். திருப்பூர் அணியில் த்ரிலோக் நாக் 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணி, முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, விக்கெட் கீப்பர் துஷார் ரஹேஜா அரைசதம் அடித்து அசத்த, பின் வரிசை வீரர்கள் யாரும் ஜோபிக்கவில்லை. இதன் காரணமாக திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களுடன் 156 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மதுரை அணி, 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதிபெற்றது.