Points Table TNPL 2023: தகுதி சுற்றில் மோதவுள்ள கோவை - திண்டுக்கல்.. 4வது இடம் இன்னமும் காலி.. புள்ளி பட்டியல் லிஸ்ட் இதோ!
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல் தகுதிச் சுற்றில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2023 தொடரின் 26வது போட்டியில் நேற்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதியது. இந்த போட்டியானது திருநெல்வேலியில் உள்ள இந்திய சிமெண்ட் நிறுவன மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.
இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் லைகா சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து இருக்கிறது.
இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி தலா 6 வெற்றிகளுடன் முதல் இரண்டு இடத்தினை பெற்றுள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல் தகுதிச் சுற்றில் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.
நெல்லை ராயல் கிங்ஸ் 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி, 7 போட்டிகளில் மூன்றில் வெற்றிபெற்று 4வது இடத்தில் உள்ளது.
சிசெம் மதுரை பாந்தர்ஸ் அணி 3 வெற்றிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. இந்த அணி தனது கடைசி லீக் போட்டியில் வெற்றிபெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆறில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று 6வது இடத்தில் உள்ளது.
7 போட்டிகளில் விளையாடி 2 ல் மட்டுமே வெற்றிபெற்று சேலம் 7வது இடத்திலும், 6 போட்டிகளில் விளையாடி 6ல் தோல்வியடைந்து திருச்சி அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
TNPL 2023 புள்ளிகள் அட்டவணை
எண் |
---|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
போட்டி சுருக்கம்:
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சன்னி சந்து 39 பந்துகளில் 57 ரன்கள் குவிக்க, சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் சுபோத் பாடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு பேட்டிங் செய்த டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர் 42 ரன்களை குவித்து தனது அணிக்கு வலுவான தொடக்கம் தந்தார். கேப்டன் பாபா இந்திரஜித் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து, 50 பந்துகளில் 83* ரன்கள் எடுத்து தனது அணியை 10 பந்துகள் மீதமிருக்க வெற்றியை தேடி தந்தார். இந்த ஏழு விக்கெட் வெற்றியின் மூலம், லைகா கோவை கிங்ஸுக்கு எதிரான முதல் தகுதிச் சுற்றில் டிராகன்ஸ் அணி வரும் வெள்ளிக்கிழமை மோத இருக்கிறது.