மேலும் அறிய

Points Table TNPL 2023: பிளே ஆஃப்பில் கால் பதித்த திண்டுக்கல்.. ஒரு இடத்திற்கு மட்டும் கடும் போட்டி.. புள்ளி பட்டியல் விவரம்!

புள்ளி பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ள கோவை, திண்டுக்கல் மற்றும் நெல்லை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் நேற்றைய நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. மதியம் நடைபெற்ற போட்டியில் சேலம் ஸ்பார்ட்ன்ஸ் அணி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை தோற்கடித்தது. இரவு நடைபெற்ற போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வென்றது. 

ப்ளே ஆஃப்க்கு போட்டி:

இந்த வெற்றி மற்றும் தோல்விகள் மூலம் டிஎன்பிஎல் புள்ளிகள் பட்டியலில் ஒரு சில மாற்றங்கள் அதிரடியாக நிகழ்ந்துள்ளது. லைகா கோவை கிங்ஸ் அணி ஆறு போட்டிகளில் 5 வெற்றியுடன் 10 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் 5 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

தொடர்ந்து நெல்லை ராயல் குஇங்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ள கோவை, திண்டுக்கல் மற்றும் நெல்லை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்றுள்ளது. தற்போதையை நிலவரப்படி, இவர்கள் நான்காவது இடத்தில் உள்ளனர். 5வது சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும், 6வது இடத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் உள்ளனர். 

சேலம் ஸ்பார்டன்ஸ் அணி ஆறில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலும், Ba11sy திருச்சி அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

TNPL 2023 புள்ளிகள் அட்டவணை

எண் அணி போட்டிகள் வெற்றி தோல்வி முடிவு இல்லை நிகர ரன் ரேட் புள்ளிகள்
1 லைகா கோவை கிங்ஸ் (பிளே ஆஃப்) 6 5 1 0 +2.138 10
2 திண்டுக்கல் டிராகன்ஸ் (பிளே ஆஃப்) 6 5 1 0 +0.467 10
3 நெல்லை ராயல் கிங்ஸ் (பிளே ஆஃப்) 6 4 2 0 +0.415 8
4 Siechem மதுரை பாந்தர்ஸ் 5 3 2 0 -0.005 6
5 சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 2 4 0 +0.298 4
6 IDream திருப்பூர் தமிழர்கள் 6 2 4 0 -0.534 4
7 சேலம் ஸ்பார்டன்ஸ் 6 2 4 0 -1.310 4
8 பா11சி திருச்சி 5 0 5 0 -1.745 0

போட்டி சுருக்கம்:

டிஎன்பிஎல்லின் 23வது போட்டியில் நேற்று இரவு நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 

நெல்லை அணியில் அதிகபட்சமாக கேப்டன் அருண் கார்த்திக் 39 ரன்கள் எடுத்திருந்தார். திண்டுக்கல் அணி சார்பில் சுபோத் பாட்டி மற்றும் மதிவண்ணன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். 

அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி 19.3 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. திண்டுக்கல் அணி சார்பில் விமல் குமார் 62 ரன்களும், சிவம் சிங் 51 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget