Pat Cummins: பார்டர் கவாஸ்கர் டெஸ்ட்.. இந்தியாவை மிரட்ட வரும் இரண்டு வீரர்கள்! பேட் கம்மின்ஸ் ஓபன் டாக்
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கேமரோன் கிரீன், மிட்செல் மார்ஸ் ஆகியோரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
பார்டர் - கவாஸ்கர் தொடர்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதாவது ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் நேரடியாக மோத உள்ளன. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியை தோற்கடிக்க முடியாவிட்டாலும் இந்த முறை கண்டிப்பாக தோற்கடிப்போம் என்று பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், "எங்கள் அணியில் ஆல் ரவுண்டர்கள் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சில சமயம் எங்கள் அணியில் இருக்கும் ஆல்ரவுண்டர்களை சரியான முறையில் பயன்படுத்தவில்லையோ என்ற யோசனை எனக்கு எப்போதுமே இருக்கிறது. அது உண்மையிலேயே நல்ல விஷயம் தான். நாங்கள் கடந்த கோடை காலத்தில் பெரிய அளவில் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. ஆனால் இம்முறை நிச்சயம் வித்தியாசமான சூழலாக இருக்கும்.
இந்திய அணியை மிரட்ட வரும் இரண்டு வீரர்கள்:
இதனால் கேமரோன் கிரீன், மிட்செல் மார்ஸ் ஆகியோரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் உள்ளூர் தொடரில் சாதாரண கிரிக்கெட் வீரராக கேமரோன் கிரீன் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். தற்போது அவர் சர்வதேச அளவில் பல அனுபவங்களை பெற்று இருக்கிறார். கேமரோன் கிரீன், மிட்செல் மார்ஷ் எங்கள் பேட்டிங் வரிசையில் டாப் ஆறு இடத்தில் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வசதியை கொடுக்கும்.
இதேபோன்று நாதன் லயான் சுழற் பந்துவீச்சாளராக அதிக ஓவர் வீசுவார். ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் அவர்களை ஐந்தாவது பந்துவீச்சாளராக நாங்கள் பயன்படுத்துவோம். தற்போது மிச்சல் மார்ஸ் கேமரோன் கிரீன் என இரண்டு வீரர்கள் இருப்பதால் அவரை நாங்கள் ஆறாவது பவுலராக கூட பயன்படுத்தலாம். இந்த இருவரும் இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடுவார்கள்"என்று பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Watch Video: காணாமல்போன முகமது ஷமி.. கம்பேக் கொடுப்பது எப்போது?
மேலும் படிக்க: Women's T20 World Cup: மகளிர் டி 20 உலகக் கோப்பை.. எங்கே நடைபெறும்? ரேஸில் இருக்கும் இரண்டு நாடுகள்! வாய்ப்பு யாருக்கு?