Wasim Akram on Viv Richards: ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் எதிர்கொண்ட அதிவேக பந்து இதுதானா? வீடியோவை பகிர்ந்த வாசிம் அக்ரம்..!
ஜாம்பவான் கிரிக்கெட்டர் ரிச்சர்ட்சன் எதிர்கொண்ட அதிவேக பந்து இதுதானா? என்று வாசிம் அக்ரம் வீடியோவை பகிர்ந்து கேட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் காலத்தாலும் அழிக்க முடியாத வீரர்களாக சிலர் மட்டுமே உலா வருகின்றனர். அவர்களில் ஜாம்பவான் வீரர் சர் விவியன் ரிச்சர்ட்ஸ். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனான ரிச்சர்ட்ஸ் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆவார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிச்சர்ட்ஸ் அளித்திருந்த பேட்டியில், தன்னுடைய கிரிக்கெட் கேரியரிலே தான் எதிர்கொண்டதிலே மிகவும் வேகமான பந்துவீச்சு பாகிஸ்தானின் வாசிம் அக்ரமுடையதுதான். 1980களின் இடைப்பட்ட பகுதியில் இளவயது அக்ரம் வேகமும், யார்க்கரும் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் கடினமான நேரமாக இருந்தது. மேலும், ஆஸ்திரேலியாவின் ஜெப் தாம்சன் பந்துவீச்சும் தான் எதிர்கொண்டதில் மிகவும் வேகமான பந்துவீச்சாளர் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் ஸ்விங் பந்துவீச்சில் ஜாம்பவனாக வலம் வந்தவருமாஜ வாசிம் அக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரிச்சர்ட்சனுக்கு அக்ரம் பந்துவீசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹலோ சர் விவியன் ரிச்சர்ட்ஸ். இந்த பந்து பற்றியா நீங்கள் பேசியுள்ளீர்கள்? இது என்னவாக இருந்தாலும், நீங்கள் எப்போதுமே தலைசிறந்தவர்” என்று புகழாரம் சூடியுள்ளார். அந்த வீடியோவில் அக்ரமின் பந்து மிகவும் வேகமாக ரிச்சர்ட்சின் தலைக்கு அருகில் கடந்து செல்கிறது.
In an @ESPNcricinfo interview with @OsmanSamiuddin @ivivianrichards said that this is THE FASTEST BALL he ever faced - a bouncer from @wasimakramlive
— Mainak Sinha🏏📽️ (@cric_archivist) March 22, 2022
Here's digging out the footage for y'all
Interview link https://t.co/tJqm9Q9Dq6
The delivery though, turned out to be a no-ball pic.twitter.com/OeruXdf9Ft
70 வயதான ரிச்சர்ட்ஸ் 121 டெஸ்ட் போட்டியில் ஆடி 8 ஆயிரத்து 540 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 24 சதங்களும், 3 இரட்டை சதங்களும், 45 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 291 ரன்களை குவித்துள்ளார். 187 ஒருநாள் போட்டியில் ஆடி 6 ஆயிரத்து 721 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 11 சதங்களும், 45 அரைசதங்களும் அடங்கம். இதுமட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 118 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். உலககோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
55 வயதான வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 414 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 356 ஒருநகள் போட்டிகளில் ஆடி 502 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுமட்டுமின்றி டெஸ்டில் ஒரு இரட்டை சதம், 3 சதம், 7 அரைசதம் அடித்துள்ளார். டெஸ்டில் அதிகபட்சமாக 257 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 6 அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 86 ரன்களை குவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்