PAK vs NED: வாழ்வா..?சாவா..? கட்டத்தில் பாகிஸ்தான்..! முதல் வெற்றியை பதிவு செய்யுமா..?
இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் தோற்றால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாக எரியும் என்பதால் சுவாரஸ்யம் சூடு பிடித்துள்ளது.
இன்று மதியம் 12.30 மணிக்கு பாகிஸ்தான் அணி தனது வாழ்வா? சாவா? போராட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின் மூலம் இரு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ஆடுவதால் ஆட்டம் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பாகிஸ்தான் - நெதர்லாந்து
உலகக்கோப்பை டி20 போட்டிகள் மையத்தை கடந்துள்ள நிலையில், இன்று குரூப் பி அணிகள் விளையாடும் நாளாக அமைந்துள்ளது. காலை தொடங்கிய போட்டியில் வங்கதேச அணியுடன் ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது. வங்கதேசம் முதலில் பேட் செய்து தட்டு தடுமாறி, 150 ரன்கள் அடித்தது. அதனை தொடர்ந்தி விளையாடி வரும் ஜிம்பாப்வே அணி ரன் குவிக்க தடுமாறி வருகிறது.
இந்த நிலையில் குரூப் பி-யில் மாலை நான்கு மணிக்கு இந்தியாவுடன் தென்னாபிரிக்க அணி மோதும் நிலையில், இடையில் மதியம் ஒரு முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் 12.30 மணிக்கு பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
முதல் வெற்றி யாருக்கு?
இதுவரை, இந்தியா மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடக்க ஆட்டங்களில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் நெருக்கடியான சூழலில் உள்ளது. இந்த போட்டி மூலம் உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பாகிஸ்தான் அணி பதிவு செய்யுமா? என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், நெதர்லாந்துக்கும் அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. எனவே இரு அணிகளும் முதல் வெற்றிக்கான தேடலோடு இன்றைய போட்டியில் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்: சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் - திடீரென அறிவித்த கருணாஸ்..! நடந்தது என்ன..?
போட்டி விபரம்
பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் இந்த டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூலமாகவும் ஆன்லைனில் பார்க்கலாம்.
வாழ்வா? சாவா?
பாகிஸ்தானின் இரண்டு தோல்விகளும் கடைசி பந்துகளில் வந்ததால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் லேசாக ஔிர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய போட்டி, நவம்பர் 3, வியாழன் அன்று தென்னாப்பிரிக்கா மற்றும் இறுதியாக நவம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷுக்கு எதிரான போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றால் ஓரளவுக்கு பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு உண்டு.
இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் தோற்றால் இன்னும் பிரகாசமாக எரியும் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு. எனவே பாகிஸ்தானுக்கு இது வாழ்வா? சாவா? போராட்டமாக இருப்பதால் பாகிஸ்தான் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.