Babar Azam birthday: உலககோப்பை கேப்டன்களுடன் 28வது பிறந்த நாள் கொண்டாடிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம்..!
Babar Azam birthday: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸாம் தனது 28வது பிறந்தநாளை மற்ற அணி கேப்டன்களுடன் கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Babar Azam birthday: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸாம் தனது 28வது பிறந்தநாளை மற்ற அணி கேப்டன்களுடன் கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
சர்வதேச டி20 உலககோப்பைத் தொடர் நாளை முதல் நடைபெறவுள்ளது. இதற்காக 16 அணிகள் ஆஸ்திரேலியா சென்றுள்ளன. நாளை முதல் தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்கி அதன் பின்னர் லீக் போட்டிகள் நடைபெறும். இதற்கு முன்னதாக 16 அணிகளின் கேப்டன்களை போட்டோ சூட் எடுக்க ஐசிசி திட்டமிட்டு இருந்தது. இதற்காக அனைத்து கேப்டன்களும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாமின் பிறந்தநாளும் நேற்று தான் என்பதால் ஐசிசி தரப்பில் இருந்து கேக் வெட்டும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் மிகவும் சர்ப்ரைஸ் அடைந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம், அதன் பின்னர் தனது பிறந்த நாள் கேக்கை வெட்டினார். இவருக்கு மற்ற அணி கேப்டன்கள் வாழ்த்து தெரிவித்தனர். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாமின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது. தற்போது இது மிகவும் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள பாபர் அஸாமின் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Happy birthday @babarazam258 🎂
— ICC (@ICC) October 15, 2022
That cake looks good! 😋#T20WorldCup pic.twitter.com/JFNeBLoVg5
இதுவரை 92 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அஸாம், இரண்டு சதங்கள், 29 அரைசதங்கள் உட்பட 3231 ரன்கள் குவித்துள்ளார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி புதிய உத்வேகத்துடன் ஐசிசி போட்டிகளில் விளையாடிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Not quite the birthday gift Gautam Gambhir was expecting pic.twitter.com/Uhks2UE3Kz
— Ronak Kapadia (@ronak_kapadia) October 15, 2022
பாபர் அஸாமின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு அனைத்து கேப்டன்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். போட்டியின் முன்னோட்டத்தின் போது பயன்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களும் மிகவும் வைரலாகி வருகிறது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாமும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் ‘இது உலககோப்பை புகைப்படமா அல்லது திருமண புகைப்படமா என கிண்டல் செய்தும் வருகின்றனர். மேலும் ஒரு சிலர் இரு அணி கேப்டன்களும் சிரித்தபடி உள்ள புகைப்படத்திற்கு ‘இதுவே கம்பீராக இருந்தால் அங்கு நடப்பதே வேறு’ என்பதைப்போல் கிண்டலும் செய்து வருகின்றனர்.
The way Babar is looking at Rohit, aisa lag raha pre wedding photoshoot ho
— Ashutosh😼 (@IAshutoshMittal) October 15, 2022



















