PAK vs SA T20 WC: அரை சதம் விளாசிய ஷதாப் கான்: தென் ஆப்பிரிக்காவுக்கு 186 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.
உலகக் கோப்பை தொடரில் 36ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் பாகிஸ்தானும் மோதுகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது பாகிஸ்தான்.
அதன்படி, முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆர்ம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு வேகம் எடுத்தனர்.
மிடில் ஆர்டரில் களம் புகுந்த இஃப்திகர் அகமது அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நவாஸ், ஷதாப் கான் ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். ஷதாப் கான் அரை சதம் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த வழிவகுத்தார்.
20 பந்துகளில் அரை சதம் பதிவு செய்து அசத்தினார் ஷதாப் கான். நவாஸ் 28 ரன்களில் நடையைக் கட்டினார்.
அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோர்ட்ஜே 4 ஓவர்கள் வீசி 41 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Pakistan have set South Africa a target of 186 💪
— ICC (@ICC) November 3, 2022
Who is winning this?#T20WorldCup | #PAKvSA | 📝: https://t.co/3VVq7VAJLt pic.twitter.com/PvlMFpFIUA
பர்னெல், ரபடா, லிங்கி கிடி, ஷம்சி ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். இவ்வாறாக பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் 6 எக்ஸ்டிராக்களை வீசினர்.
கேப்டன் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா 186 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக பவுமாவும், குவின்டன் டி காக்கும் களமிறங்கினர். குவின்டன் டக் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ரிலீ ரோசோவ் 7 ரன்களில் நடையைக் கட்டினார்.
இரண்டு விக்கெட்டுகளையும் ஷாஷீன் அஃப்ரிடி வீழ்த்தினார். கேப்டன் பவுமா 36 ரன்கள் எடுத்திருந்தபோது ஷதாப் கான் வீசிய பந்தில் அவர் ரிஸ்வானிடம் கேட்ச் ஆகி பெவிலியன் சென்றார்.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி தற்போது வரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் குரூப் பி பிரிவில் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
பாகிஸ்தான் அணி நெதர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
நெதர்லாந்துக்கு எதிரான வெற்றியின் போது, ஃபகார் ஜமான் காயத்தில் இருந்து மீண்டு, ஆடும் லெவன் அணிக்கு திரும்பினார். 13.5 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் துரத்த, ஃபகர் ஜமான் 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தது முக்கியமாக அமைந்தது. அந்த போட்டியில் வர்ணனையில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் பாபரை விமர்சித்தார். மேலும் அவரை ஒரு சுயநல கேப்டன் என்று அழைத்தார்.