மேலும் அறிய

SL vs PAK World Cup 2023: மென்டிஸ் சமரவிக்ரம அதிரடி சதம்; பவுலிங்கில் பஞ்சரான பாகிஸ்தானுக்கு 345 ரன்கள் இலக்கு

Sri Lanka vs Pakistan 1st Innings Highlights: மென்டிஸ் மற்றும் சமரவிக்ரமா இணைந்து பாகிஸ்தானின் முக்கியமான பந்து வீச்சாளர்கள் என வரிசைப்படுத்தப்பட்ட அனைவரது ஓவரிலும் பவுண்டரி மழை பொழிந்தனர்.

ICC WC 2023 SL Vs Pak: 13வது உலகக் கோப்பை 2023 தொடர் மிகவும் கோலாகலமாக இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. கடந்த 5ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த தொடரில் களமிறங்கியுள்ள அனைத்து அணிகளும் குறைந்த பட்சம் தலா ஒரு போட்டியை விளையாடி புள்ளிப்பட்டியலில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள தொடங்கிவிட்டன. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்க 10 அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றது. 

இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இலங்கை மற்றும் பாகீஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி இலங்கை அணியின் இன்னிங்ஸை குஷால் பெராரா மற்றும் பதும் நிஷ்கங்க ஆகியோர் தொடங்கினர். இதில் பெராரா தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த குஷால் மென்டிஸ் சிறப்பாகவும் பொறுப்பாகவும் நிஷ்கங்கவுடன் இணைந்து விளையாடினார். இருவரும் இணைந்தது முதல் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வந்தனர். 

பாகிஸ்தானுக்கு விக்கெட்டுகளை அள்ளித்தரும் என நம்பப்பட்ட ஷெகின் அஃப்ரிடி பந்தினை இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விளாசினர். முதல் விக்கெட்டினை அணியின் ஸ்கோர் 5 ரன்களாக இருந்தபோது இழந்த இலங்கை அணி, தனது இரண்டாவது விக்கெட்டினை 107 ரன்களாக இருந்தபோது இழந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் 102 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர் வந்த சமரவிக்ரம மென்டிஸ்க்கு நன்கு ஒத்துழைப்பு கொடுக்க பாகிஸ்தான் பவுலர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. 

இருவரும் இணைந்து பாகிஸ்தானின் முக்கியமான பந்து வீச்சாளர்கள் என வரிசைப்படுத்தப்பட்ட அனைவரது ஓவரிலும் பவுண்டரி மழை பொழிந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்ததால், இலங்கை அணி இமாலய இலக்கை நோக்கி முன்னேறியது. 

மென்டிஸ் 65 பந்துகளில் தனது சதத்தினை நிறைவு செய்து அதிரடியாக விளையாடி தனது விக்கெட்டினை இழந்தார். இவர் 77 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் விளாசி 122 ரன்கள் குவித்த நிலையில், ஹாட்ரிக் பவுண்டரி விளாச முயற்சித்து வெளியேறினார்.  அதன் பின்னர் வந்தவர்கள் களத்தில் நிலைத்து நின்று விளையாடிய சமரவிக்ரமவிற்கு ஒத்துழைப்பு தர, அவரும் தனது சதத்தினை 82 பந்துகளில் எட்டினார். சதம் கடந்த பின்னரும் சிறப்பாக விளையாடி வந்த சமரவிக்ரம 89 பந்தில் 108 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் சேர்த்தது.  உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணியின் அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவாகியுள்ளது. இலங்கை தரப்பில் மென்டிஸ் 122 ரன்களும், சமரவிக்ரம 108 ரன்களும் அதிகபட்சமாக குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 10 ஓவர்கள் வீசி 71 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது கிடையாது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில் இலங்கை அணி தனது மோசமான வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை இரண்டாவது இன்னிங்ஸில்தான் பார்க்க முடியும்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE: ஆர்.சி.பி.  அதிரடி மன்னன் வில் ஜேக்சை தட்டித் தூக்கியது மும்பை
IPL Auction 2025 LIVE: ஆர்.சி.பி. அதிரடி மன்னன் வில் ஜேக்சை தட்டித் தூக்கியது மும்பை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE: ஆர்.சி.பி.  அதிரடி மன்னன் வில் ஜேக்சை தட்டித் தூக்கியது மும்பை
IPL Auction 2025 LIVE: ஆர்.சி.பி. அதிரடி மன்னன் வில் ஜேக்சை தட்டித் தூக்கியது மும்பை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
Embed widget