ODI World Cup 2023 Live Streaming: நாளை மறுநாள் முதல் தொடங்கும் பிரமாண்டம்... உலகக் கோப்பை போட்டியை எங்கே, எப்படி பார்ப்பது..?
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியானது வருகின்ற அக்டோபர் 5 ம் தேதி (வியாழன்) முதல் தொடங்குகிறது. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. 45 லீக் ஆட்டங்கள் கொண்ட உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்று உட்பட மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. போட்டியின் அனைத்து போட்டிகளும் மொத்தமாக 10 மைதானங்களில் நடைபெறுகிறது. அனைத்து கிரிக்கெட் உலகமும் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டியானது அடுத்த மாதம் நவம்பர் 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். போட்டியின் அனைத்து போட்டிகளையும் எப்போது, எங்கு, எப்படி பார்க்க முடியும் என்பதை உங்களுக்கு சொல்கிறோம். முழு உலகக் கோப்பையின் அட்டவணையையும் பின்வருமாறு..
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை எங்கே, எப்படி நேரடியாகப் பார்ப்பது..?
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் போட்டிகளின் இலவச நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் ஸ்டேடியங்கள்:
- நரேந்திரமோடி கிரிக்கெட் ஸ்டேடியம் (அகமதாபாத்)
- ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம் (ஹைதராபாத்)
- இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் (தர்மசாலா)
- அருண் ஜெட்லி ஸ்டேடியம் (டெல்லி)
- எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் (சென்னை)
- ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம் (லக்னோ)
- மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் (புனே)
- எம் சின்னசாமி ஸ்டேடியம் (பெங்களூரு)
- வான்கடே ஸ்டேடியம் (மும்பை)
- ஈடன் கார்டன்ஸ் (கொல்கத்தா).
உலகக் கோப்பைக்கான முழு அட்டவணை உங்களுக்காக!
- அக்டோபர் 5: இங்கிலாந்து vs நியூசிலாந்து - அகமதாபாத்
- அக்டோபர் 6: பாகிஸ்தான் vs நெதர்லாந்து - ஹைதராபாத்
- அக்டோபர் 7: பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் - தர்மசாலா
- அக்டோபர் 7: தென்னாப்பிரிக்கா vs இலங்கை - டெல்லி
- அக்டோபர் 8: இந்தியா vs ஆஸ்திரேலியா- சென்னை
- அக்டோபர் 9: நியூசிலாந்து vs நெதர்லாந்து - ஹைதராபாத்
- அக்டோபர் 10: இங்கிலாந்து vs பங்களாதேஷ்-தர்மசாலா
- அக்டோபர் 10: பாகிஸ்தான் vs இலங்கை- ஹைதராபாத்
- அக்டோபர் 11: இந்தியா vs ஆப்கானிஸ்தான்- டெல்லி
- அக்டோபர் 12: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா- லக்னோ
- அக்டோபர் 13: நியூசிலாந்து vs வங்கதேசம்- சென்னை
- அக்டோபர் 14: இந்தியா vs பாகிஸ்தான்- அகமதாபாத்
- அக்டோபர் 15: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்- டெல்லி
- அக்டோபர் 16: ஆஸ்திரேலியா vs இலங்கை - லக்னோ
- அக்டோபர் 17: தென்னாப்பிரிக்கா vs நெதர்லாந்து - தர்மசாலா
- அக்டோபர் 18: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்- சென்னை
- அக்டோபர் 19: இந்தியா vs வங்கதேசம்- புனே
- அக்டோபர் 20: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - பெங்களூரு
- அக்டோபர் 21: நெதர்லாந்து vs இலங்கை - லக்னோ
- அக்டோபர் 21: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா- மும்பை
- அக்டோபர் 22: இந்தியா vs நியூசிலாந்து - தர்மசாலா
- அக்டோபர் 23: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்- சென்னை
- அக்டோபர் 24: தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ்- மும்பை
- அக்டோபர் 25: ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து-டெல்லி
- அக்டோபர் 26: இங்கிலாந்து vs இலங்கை - பெங்களூரு
- அக்டோபர் 27: பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா- சென்னை
- அக்டோபர் 28: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து - தர்மஷாலா
- அக்டோபர் 28: நெதர்லாந்து vs பங்களாதேஷ் - கொல்கத்தா
- அக்டோபர் 29: இந்தியா vs இங்கிலாந்து - லக்னோ
- அக்டோபர் 30: ஆப்கானிஸ்தான் vs இலங்கை - புனே
- அக்டோபர் 31: பாகிஸ்தான் vs பங்களாதேஷ்- கொல்கத்தா
- நவம்பர் 1: நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா- புனே
- நவம்பர் 2: இந்தியா vs இலங்கை - மும்பை
- நவம்பர் 3: நெதர்லாந்து vs ஆப்கானிஸ்தான் - லக்னோ
- நவம்பர் 4: நியூசிலாந்து vs பாகிஸ்தான் - பெங்களூரு
- நவம்பர் 4: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா- அகமதாபாத்
- நவம்பர் 5: இந்தியா vs தென்னாப்பிரிக்கா - கொல்கத்தா
- நவம்பர் 6: பங்களாதேஷ் vs இலங்கை- டெல்லி
- நவம்பர் 7: ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் - மும்பை
- நவம்பர் 8: இங்கிலாந்து vs நெதர்லாந்து - புனே
- நவம்பர் 9: நியூசிலாந்து vs இலங்கை - பெங்களூரு
- நவம்பர் 10: தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான்- அகமதாபாத்
- நவம்பர் 11: ஆஸ்திரேலியா vs வங்கதேசம்- புனே
- நவம்பர் 11: இங்கிலாந்து vs பாகிஸ்தான் - கொல்கத்தா
- நவம்பர் 12: இந்தியா vs நெதர்லாந்து - பெங்களூரு
- 15 நவம்பர்: அரையிறுதி 1- மும்பை
- 16 நவம்பர்: அரையிறுதி 2- கொல்கத்தா
- 19 நவம்பர்: இறுதி- அகமதாபாத்.