Mohammed Shami: வெறித்தனம்... அசத்தல் பந்து வீச்சு... எகிறும் ஸ்டெம்புகள்: எதிரணியை கதிகலங்க வைக்கும் முகமது ஷமி!
2 போட்டிகள் விளையாடி மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் முகமது ஷமி.
ஐசிசி உலகக் கோப்பையின் 29-வது லீக் போட்டி நேற்று (அக்டோபர் 29) நடைபெற்றது.
உத்தரப்பிரதேச மாநிலம லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
பின்னர் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிட இங்கிலாந்து அணி 34. 5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. முன்னதாக இந்த போட்டியில் மொத்தம் 7 ஓவர்கள் வீசிய இந்திய அணியின் பந்து வீச்சாளர் முகமது ஷமி, 2 ஓவர்கள் மெய்டன் செய்து 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அபராமாக கைப்பற்றினார்.
இரண்டு போட்டி 9 விக்கெட்... கலக்கல் ஷமி:
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 லீக் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. அதில், இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி இரண்டு ஆட்டங்கள் மட்டுமே விளையாடி உள்ளார்.
இந்த இரண்டு போட்டிகளிலும் தன்னுடைய சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி எதிர் அணியின் பேட்டர்களை மிரட்டி உள்ளார்.
அந்த வகையில், கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் உலகக் கோப்பை தொடரின் 21 -வது லீக் போட்டி நடைபெற்றது. அந்த லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது இந்திய அணி.
இதில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முக்கியமாக இந்த போட்டியில் முகமது ஷமி மொத்தம் 10 ஓவர்கள் வீசினார். அதில், 54 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதேபோல் தான் நேற்றைய போட்டியிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் முகமது ஷமி.
மேலும், இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதன்படி, 6 வெற்றிகளுடன் +1.405 என்ற ரன் ரேட் அடிப்படையில் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. வரும் நவம்பர் 2 ஆம் தேதி இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது இந்தியா.
மேலும் படிக்க: IND vs ENG Match Highlights: ஷமி - பும்ரா வேகத்தில் அப்பளம் போல் நொறுங்கிய இங்கிலாந்து; 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி
மேலும் படிக்க: IND vs ENG Innings Highlights: கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய ரோகித் சர்மா; பந்து வீச்சில் பட்டையை கிளப்பிய இங்கிலாந்துக்கு 230 ரன்கள் இலக்கு