KL Rahul: கே.எல். ராகுலை மீண்டும் விளாசும் வெங்கடேஷ் பிரசாத்.. ”போயி கவுண்டி கிரிக்கெட் விளையாடுங்க”
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஃபார்ம் அவுட்டில் இருந்து மீண்டு வர, கே.எல். ராகுல் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
வெங்கடேஷ் பிரசாத் விமர்சனம்:
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளுக்குமான, இந்திய அணியிலும் கே.எல்.ராகுலின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக, அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் அய்யர், சில கருத்துகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக பல்வேறு டிவிட்டர் பதிவுகளையும் வெளியிட்டுள்ளார்.
இதுதான் வெளிநாட்டு பெர்மான்ஸ் ஆ?
”கே.எல்.ராகுலுக்கு வெளிநாடுகளில் சிறந்த டெஸ்ட் சாதனை இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் புள்ளிவிவரங்கள் வேறுவிதமாக உள்ளன. வெளிநாடுகளில் 56 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ராகுல் சராசரியாக 30 ரன்களை எடுத்துள்ளார். அவர் 6 வெளிநாட்டு சதங்களை அடித்துள்ளார், ஆனால் அதை தொடர்ந்து குறைந்த ஸ்கோர்கள் மட்டுமே அடித்ததால் அவரது சராசரி 30 ரன்களாக குறைந்துள்ளது. ஷிகர் தவான், அஜிங்க்யா ரகானே, சுப்மன் கில் மற்றும் மயங்க் அகர்வால் அகியோரது சராசரி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் செயல்பாடுகளையு, ராகுலுடன் ஒப்பிட்டுள்ளார்.
கவுண்டி விளையாடுங்கள்:
இந்த சூழலிலும் கே.எல். ராகுல் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் கம்பேக் கொடுப்பதற்கு, என்னபோன்ற விமர்சகர்களின் வாயை அடைப்பதற்கும் இதைவிட சரியான நேரம் அமையாது. இல்லாவிட்டால் சென்று கவுண்டி கிரிக்கெட் விளையாடி, தன்னை மேம்படுத்திக் கொண்டு மீண்டும் டெஸ்ட் அணிக்கு ராகுல் திரும்பலாம். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னை இல்லை ” எனவும் வெங்கடேஷ் பிரசாத் பரிந்துரைத்துள்ளார்.
ராகுலுக்கு பாரபட்சம் காட்டும் பிசிசிஐ:
முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடியபோதே, கே. எல். ராகுலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெங்கடேஷ் பிரசாத் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதில், ”ராகுலின் விளையாட்டு திறன் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் அவரது செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. 8 வருடங்களாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வரும் ராகுல், 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிறகும் சராசரி ரன் விகிதமாக வெறும் 34 ஆக வைத்திருப்பது வெறும் சாதாரணமான விஷயம். இதுபோன்று பல்வேறு வாய்ப்புகளை பெற்ற வேறு எந்தவொரு வீரரையும் என்னால் கூறமுடியவில்லை. குறிப்பாக தொடர்ந்து யாருக்கும் இதுபோன்று வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிசிசிஐ கே.எல். ராகுலுக்கு பாட்ரபட்சம் காட்டுகிறது” என வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கே.எல். ராகுலின் ஆட்டம் மோசமாக இருந்ததால், அவர் கவுண்டி கிரிக்கெட் விளையாடி தனது திறனை மேம்படுத்த வேண்டும் என வெங்கடேஷ் பிரசாத் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, ரசிகர்களும் கே.எல். ராகுலுக்கு பதிலாக நல்ல ஃபார்மில் உள்ள சுப்மன் கில்லுக்கு, அஸ்திரேலிய அணிக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.