Mohammed Siraj: கேட்டரிங் வேலை.. ரூமாலி ரொட்டி.. கையெல்லாம் எறியும்! கடந்து வந்த பாதையை நினைத்து உருகிய முகமது சிராஜ்!
என்னுடைய வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் நான் கேட்டரிங் வேலைக்குச் சென்றேன் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பேசியுள்ளார்.
நெகிழ்ச்சியுடன் பேசிய சிராஜ்:
இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது சிராஜ். தன்னுடைய 30-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அந்த வகையில் 7 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாட தொடங்கிய சிராஜ் கடந்த 2015- 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகனார். தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கேட்டரிங் வேலைக்குச் சென்றேன்:
இந்நிலையில்தான் கடந்து வந்த பாதை குறித்து நெகிழ்ச்சி சம்பவங்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக முகமது சிராஜ் பேசுகையில், “கடந்த 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டு எனக்கு மிகவும் ஒரு மோசமான ஆண்டாகவே இருந்தது. இதனால் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விடலாம் என்று நான் நினைத்தேன். என்னுடைய வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் நான் கேட்டரிங் வேலைக்குச் சென்றேன். அங்கு ரூமாலி ரொட்டியை புரட்டும்பொழுது என் கைகள் எறியும். இதையெல்லாம் தாங்கிக்கொண்டேன்.
View this post on Instagram
என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்னை படிக்கச் சொன்னார்கள். அப்போது நாங்கள் வாடகை வீட்டில் இருந்தோம். ஆனாலும் எனக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் குறையவில்லை சொல்லப்போனால் அதிக ஆர்வத்துடன் இருந்தேன்.
🏠 𝙃𝙤𝙢𝙚𝙘𝙤𝙢𝙞𝙣𝙜 𝙨𝙥𝙚𝙘𝙞𝙖𝙡 𝙛𝙩. 𝙈𝙤𝙝𝙖𝙢𝙢𝙚𝙙 𝙎𝙞𝙧𝙖𝙟
— BCCI (@BCCI) March 13, 2024
As he celebrates his birthday, we head back to Hyderabad where it all began 👏
The pacer's heartwarming success story is filled with struggles, nostalgia and good people 🤗
You've watched him bowl, now… pic.twitter.com/RfElTPrwmJ
எங்கள் வீட்டில் அப்பா மட்டும் தான் வேலைக்குச் செல்வார். அவர் தான் எங்களை பார்த்துக்கொண்டார். அந்த சமயத்தில் எனக்கு 100 - 200 ரூபாய் கிடைத்தாலே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதில் 100 முதல் 150 ரூபாயை வீட்டில் கொடுத்து விடுவேன். மீதி இருக்கும் 50 ரூபாயை நான் எனது செலவுக்கு வைத்துக்கொள்வேன்.
என் வாழ்வில் இது போன்ற போராட்டங்களை கடந்துதான், நான் இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். நீங்கள் கடினமாக உழையுங்கள். உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. இன்று அல்லது நாளை இல்லை சில வருடங்கள் கடந்தாலும் உங்கள் கடினமான உழைப்புக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்” என்று நெகிழ்ச்சி பொங்க பேசியுள்ளார் முகமது சிராஜ்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!