Watch video : ரிஷப் பண்ட் லைவில் தல தோனி கொடுத்த ஒரு நிமிட தரிசனம்... வைரலாகும் வீடியோ..!
ஒருநாள் போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்கியது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் போட்டி டிரினிடாட்டில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இதே மைதானத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 39 வருட ஆசை ஒன்று நிறைவேறப் போகிறது. அதாவது 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றினால் ஒருநாள் வரலாற்றில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த சாதனையை இந்தியா படைக்கும்.
ஒருநாள் போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்கியது. இங்கிலாந்து தொடருக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் டி 20 போட்டிகளுக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் மற்றும் ரவி அஷ்வின் ஆகியோர் நேற்று அணியினருடன் இணைந்தனர்.
இந்த நிலையில், நேற்று விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனது அசக அணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் இன்ஸ்டாகிராம் லைவ் பக்கத்தில் இணைந்தார். அடுத்ததாக லைவ் பக்கத்தில் யாரை சேர்க்கலாம் என ரசிகர்களிடம் ரிஷப் பந்த் கேட்க, அவர்கள் உடனடியாக தோனி! தோனி என குரல் கொடுத்தனர்.
View this post on Instagram
இதையடுத்து, ரிஷப் தோனியை அழைத்தார். அப்பொழுது முதலில் போனை எடுத்த சாக்ஷி ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு தோனியிடம் போனை கொடுத்தார். முதலில் ரசிகர்களுக்கு தோனி ஹாய் தெரிவிக்க, உடனடியாக ரிஷப், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் மஹி பாய்? தயவு செய்து லைவ் செஷனில் தம்பியை வைத்துக்கொள்ளுங்கள்) தோனி கேமராவை அணைத்தார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்