Ravindra Jadeja: வெள்ளை பந்து போட்டி... அதிக விக்கெட் எடுத்த டாப் 5 இந்திய வீரர்கள் யார்... லிஸ்ட் இதோ!
வெள்ளை பந்து போட்டிகளில் சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
![Ravindra Jadeja: வெள்ளை பந்து போட்டி... அதிக விக்கெட் எடுத்த டாப் 5 இந்திய வீரர்கள் யார்... லிஸ்ட் இதோ! Most Wickets for India in ICC White ball matches Ravindra Jadeja: வெள்ளை பந்து போட்டி... அதிக விக்கெட் எடுத்த டாப் 5 இந்திய வீரர்கள் யார்... லிஸ்ட் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/c54c4fe455928030b77f5f102e26822b1699270739960739_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்திய அணியின் ஆதிக்கம் தான் தொடர்ந்து வருகிறது. மேலும், இந்திய அணி இந்த முறை உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
காரணம் இந்திய அணி வீரர்கள் இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இச்சூழலில் ஐசிசி நடத்தும் சர்வதேச வெள்ளை பந்து போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணி வீரர்களின் பட்டியலை பார்ப்போம்:
ஜாகிர் கான்:
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அதன்படி மொத்தம் 44 இன்னிங்ஸில் வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில், அவர் மொத்தம் 71 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜா:
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மொத்தம் 50 இன்னிங்ஸ்களில் வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில், 62 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முகமது சமி:
2023 உலகக் கோப்பையில் தன்னுடைய பந்து வீச்சு திறமையால் எதிரணி வீரர்களை திக்குமுக்காட வைக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் முகமது சமி இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அதன்படி, அவர் 29 இன்னிங்ஸ்களில் வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் அசாத்தியமாக தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனிடையே, மொத்தம் 61 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
அஸ்வின்:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நான்காவது இடத்தில் இருக்கிறார். அதன்படி, மொத்தம் 43 இன்னிங்ஸ்களில் வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில், 59 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் அஸ்வின்.
ஹர்பஜன் சிங்:
சர்வதேச கிரிக்கெட்டில் வெள்ளை பந்து போட்டிகளில் மொத்த, 51 இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கிறார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். அதன்படி அவர் மொத்தம் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கிறார்.
வெள்ளை நிற பந்து எந்த போட்டிகளில் பயன்படுத்தப்படும்:
பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிறத்திலான பந்துகள் பயன்படுத்தப் படும். அதேபோல், ஒரு நாள் போட்டிகளில் வெள்ளை நிற பந்துகள் பயன்படுத்தப்படும். அதற்கான காரணம் என்னவென்றால் இரவு நேரங்களில் போட்டிகள் நடைபெறும் வெள்ளை நிற பந்துகள் எளிதாக தெரியும்.
ஆனால் சிவப்பு நிற பந்துகளை பயன்படுத்தினால் இரவு நேரங்களில் தெரியாது என்பதால் தான் ஒரு நாள் போட்டிகளில் வெள்ளை நிற பந்துகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: SL Vs BAN LIVE Score: சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்த மேத்யூஸ் - அசத்தும் வங்கதேசம்
மேலும் படிக்க: IND vs SA Innings Highlights: 49வது ODI சதம் விளாசி கோலி சாதனை - தென்னாப்ரிக்காவிற்கு 327 ரன்கள் இலக்கு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)