Ben Stokes Record: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்..! புதிய உலக சாதனை படைத்த பென்ஸ்டோக்ஸ்..!
Ben Stokes Record: சர்வதேச்ச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த நியூசிலாந்தின் மெக்கல்லமின் சாதனையை சமன் செய்துள்ளார்.
Ben Stokes Record: சர்வதேச்ச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த நியூசிலாந்தின் மெக்கல்லமின் சாதனையை சமன் செய்துள்ளார்.
பென்ஸ்டோக்ஸ்:
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் நாட்டில் உள்ள முல்தான் நகரில் உள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் எடுத்தது. அதேபோல் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 202 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 79 ரன்கள் முன்னிலை வகித்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடிவருகிறது.
புதிய சாதனை:
இந்த போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 30 ரன்கள் (3 பவுண்டரி, 1 சிக்ஸர்) மற்றும் 41 ரன்கள் (1 ஃபோர், 1 சிக்ஸர்) எடுத்தார். இந்த போட்டியில் இவர் 2 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெடில் 107 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை நியூசிலாந்தின் பிரன்டென் மெக்கலம் படைத்திருந்தார். தற்போது அதிக சிக்ஸர்கள் அடித்த நியூசிலாந்தின் மெக்கலம் சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன் செய்துள்ளார். இந்த டெஸ்ட் கிரிக்கெட் பென் ஸ்டோக்ஸுக்கு 88வது டெஸ்ட் என்பதால் குறைந்த போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர் எனும் சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும் இதற்கு முன்னர் இச்சாதனையை படைத்திருந்த மெக்கல்லம் 101 போட்டிகளில் இச்சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stokes 🤝 McCullum
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 11, 2022
It was meant to be! pic.twitter.com/a4kf347IxM
தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் எனும் இடத்தில் உள்ள பென் ஸ்டோக்ஸ் இன்னும் அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனைக்கான மைல் கல்லை இன்னும் உயரத்தில் வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதேபோல், வங்கதேசத்திற்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மூன்றாவது சிக்ஸரை அடித்ததன்மூலம், ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் படைத்துள்ளார். இவருக்கு முன்னோடியாக சர்வதேச கிரிக்கெட்டில் 553 சிக்ஸர்கள் அடித்து கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். வேறு எந்த இந்திய வீரரும் 400 சிக்ஸர்களுக்கு மேல் அடித்ததில்லை. இந்திய வீரர்களில் 359 சிக்ஸர்களுடன் தோனி ரோஹித்துக்கு மிக நெருக்கமாக உள்ளார்.
476 சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி மூன்றாம் இடத்திலும், 398 சிக்ஸர்களுடன் பிரண்டன் மெக்கலம் நான்காம் இடத்திலும் உள்ளனர். மற்றொரு நியூசிலாந்து வீரரான மார்டின் கப்தில் 383 சிக்ஸர்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.
இந்த டாப் 5 பேட்ஸ்மேன்களில் ரோகித் சர்மா மற்றும் மார்டின் கப்தில் மட்டுமே சர்வதேச அளவில் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.