Watch Video: குல்தீப் யாதவ் வீசிய வேகப்பந்து! மிரண்டு போன மிட்செல் - நீங்களே பாருங்க
உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் குல்தீப் யாதவ் திடீரென வீசிய வேகப்பந்தில் மிட்செல் கையைத் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பையில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி விராட் கோலியின் அபார பேட்டிங்கால் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மிரண்டு போன மிட்செல்:
இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான கான்வே டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் வில் யங் 17 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து, ரச்சின் ரவீந்திராவுடன் ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் அபாரமாக ஆடி நியூசிலாந்து அணியின் ஸ்கோரை எகிற வைத்தார்.
ஆட்டத்தின் 33வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தை டேரில் மிட்செல் எதிர்கொண்டார். பொதுவாக சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகள் மெதுவாக வருவதே வழக்கம். ஆனால், குல்தீப் யாதவ் வீசிய அந்த பந்து மின்னல் வேகத்தில் சென்றது. அந்த பந்தை ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற டேரில் மிட்செல்லின் கையில் பலமாகப்பட்டது. டேரில் மிட்செல்லும் தனது கையை வலி தாங்காமல் பிடித்தார். இதை கண்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா மைதானத்திலே சிரித்தார். குல்தீப் யாதவ் வீசிய அந்த பந்து மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்திற்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசம்:
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டியில் குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், 73 ரன்களை வழங்கினார். இந்த போட்டியில் டேரில் மிட்செல் நியூசிலாந்து அணிக்காக 127 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸருடன் 130 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றது மூலமாக இந்திய அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன்மூலமாக இந்திய அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
மேலும் படிக்க: Pak Vs AFG Score LIVE: ஆஃப்கானிஸ்தான் அணியை அலறவிடும் பாகிஸ்தான்; பவுண்டரி சிக்ஸர் என அதிரடி ரன் குவிப்பு
மேலும் படிக்க: Watch Video: ’என் இனிய பொன் நிலாவே’.. கிட்டாரில் வாசித்து அசத்திய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன்!