Watch Video: ’என் இனிய பொன் நிலாவே’.. கிட்டாரில் வாசித்து அசத்திய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன்!
ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காக விளையாடிய ஷேன் வாட்சன் 30.99 சராசியில் 3874 ரன்கள் எடுத்துள்ளார்.
எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஷேன் வாட்சன், கடந்த 2020ம் ஆண்டு அனைத்து வகையாக கிரிக்கெட்டிலும் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.
கடந்த 2016ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற வாட்சன், கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். 2018ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 57 பந்துகளில் 117 ரன்களை குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காக விளையாடிய ஷேன் வாட்சன் 30.99 சராசியில் 3874 ரன்கள் எடுத்துள்ளார். 145 போட்டிகளில் 4 சதங்கள் மற்றும் 21 அரை சதங்களும், 92 விக்கெட்களையும் எடுத்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது கடைசி ஆட்டத்தில் விளையாடினார். ஷேன் வாட்சன் கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் இரண்டு அரை சதங்களின் உதவியுடன் 299 ரன்கள் எடுத்தார். இந்தியன் பிரீமியர் லீக்கில் சதம் அடித்து ஹாட்ரிக் எடுத்த முதல் வெளிநாட்டு கிரிக்கெட் வீரரான ஆல்ரவுண்டர், 2011 மற்றும் 2015 க்கு இடையில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர் அல்லாத கிரிக்கெட் வீரராகவும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், இந்தியாவில் தற்போது ஒருநாள் உலகக் கோப்பை 2023 நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இப்படி ஒரு புறம் பிஸியாக இருந்து வரும் அவர், சமீபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல யூடியுபர் மதன் கௌரி எடுத்த பேட்டி ஒன்றில் பங்கேற்றார்.
En iniya pon nilave 🎼
— CSK Fans Army™ (@CSKFansArmy) October 23, 2023
by Shane Watson 🎸😂💛#WhistlePodu #IPL #CSK #IPL2023pic.twitter.com/KgMbKKOdqq
ஆரம்பம் முதலே கான்செப்ட்டின்படி, மதம் கௌரி ஷேன் வாட்சனை டாமினேட் செய்வது போலவும், அதற்கு ஷேன் வாட்சன் மிகவும் கூலாக பதில் அளிப்பது போல் எடுக்கப்பட்டு இருந்தது. அதில்,
மதன் கௌரி: ஹாய்
ஷேன் வாட்சன்: ஹாய்
மதன் கௌரி: ப்ளீஸ் உட்காருங்கள்
ஷேன் வாட்சன்: நன்றி
மதன் கௌரி: விளையாடுவதற்கு முன்பு எங்கையாவது வேலை பார்த்து உள்ளீர்களா..?
ஷேன் வாட்சன்: ஆஸ்திரேலியா
மதன் கௌரி: அங்கு என்ன ரோலில் வேலை பார்த்தீர்கள்..?
ஷேன் வாட்சன்: விளையாட்டு வீரர்
மதன் கௌரி: உங்களுக்கு ஐபிஎல் தெரியுமா..?
ஷேன் வாட்சன்: எஸ்
மதன் கௌரி: உங்களுக்கு மிகவும் பிடித்த அணி எது..?
ஷேன் வாட்சன்: முதல் ஏழு ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ், அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினேன். தொடர்ந்து, சென்னை அணிக்காக விளையாடினேன்.
மதன் கௌரி: ஏன் எப்ப பார்த்தாலும் அணியில் இருந்து மாறிக்கொண்டே இருந்தீர்கள்..?
ஷேன் வாட்சன்: எனது வாய்ப்புக்காக.!
மதன் கௌரி: இந்த வருடம் எந்த அணி உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுகிறது..?
ஷேன் வாட்சன்: இந்தியா
என்று எப்படி கேள்விகள் சென்று கொண்டிருக்க மதன் கௌரி இறுதியாக, உங்களுக்கு ஏதாவது ஸ்பெஷல் திறமை இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது ஷேன் வாட்சன் டக்கென்று அருகிலிருந்த கிட்டாரை எடுத்து ‘என் இனிய பொன் நிலவே’ என்று வாசிக்க தொடங்கினார். இதை எதிர்பார்க்காத அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி போனார்கள்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.